பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations)
தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் தேர்வுகளுக்குப் பயன்படக்கூடிய வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வினா விடைகள் இந்த வினாவிடைப் பட்டியலில் அவ்வப்போது சேர்க்கப்படும்.
- புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவுக்குப் பெயரென்ன?
- விடை: தொல்லுயிரியல்.
- தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: லியோனார்டோ டாவின்சி.
- தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: கேஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் (Kaspar Maria Von Sternberg).
- சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
- விடை: சார்லஸ் டார்வின் (Charles Darwin).
- இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
- விடை: பீர்பால் சஹானி (Birbal Sahani).
- பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவவதற்கு என்ன பெயர்
- விடை: படிவமாதல்.
- இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
- விடை: டாக்டர் மா.சா. சுவாமிநாதன் (Dr. M.S. Swaminathan).
- மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறைக்குப் பெயரென்ன?
- விடை: குளோனிங்.
- ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் (Restriction Enzymes), டி.என்.ஏ (DNA) இழையின் குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்கின்றன. இதனால் இவை வேறு விதமாகவும் அழைக்கைப்படுகின்றன. இவற்றின் மற்றொரு பெயர் என்ன?
- விடை: மூலக்கூறு கத்திரிக்கோல்.
- துண்டிக்கப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இ்ணக்கப்பயன்படும் நொதியின் பெயர் என்ன?
- விடை: லைகோஸ் நொதி.
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு