என்னால் பேச முடிந்தால்! – மனதை நெகிழ வைக்கும் குறும்படம் – ஷான் வெல்லிங் (If I Could Talk – Short Film – Shawn Welling)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் அமைந்துள்ள வெல்லிங் பட நிறுவனம் (Welling Films) தயாரித்துள்ள புகழ் பெற்ற குறும்படம் தான் “என்னால் பேச முடிந்தால்” (If I Could Talk). வெல்லிங் பட நிறுவனத்தின் நிறுவனர் ஷான் வெல்லிங் தான் பல பன்னாட்டு விருதுகளைப் பெற்ற இந்தப் படத்தின் இயக்குநர்.
நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள ஆழமான அன்பை வெளிப்படுத்தும் இந்தப் படம் 7 நிமிடங்களிலேயே பல ஆழமான உண்மைக் கருத்துகளை அழகாக வெளிப்படுத்துகிறது. வசனம் இல்லாமலேயே, மெல்லிய பிண்ணனி இசையுடன் இதில் நடித்திருக்கும் நாயின் பார்வையிலிருந்து, அதாவது அதன் கோணத்திலிருந்து இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவுடன் நம்மை நெகிழச்செய்துவிடும். அதானால் தான் இந்தப் படம் பல பன்னாட்டு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. இதோ “என்னால் பேச முடிந்தால்” (If I Could Talk) படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ (க்ளிக் செய்து பார்க்கவும்!):
“என்னால் பேச முடிந்தால்” (If I Could Talk) படத்தின் அடுத்த பாகம் “என்னால் குரைக்க முடிந்தால்!” (If I Could Bark). நாயின் கோணத்திலிருந்த அமைதியாக, அழகாக நகர்ந்த முதல் பாகம், வேறு ஒரு கோணத்தில் நம் மனதை நெகிழ வைக்க இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது! இதோ “என்னால் குரைக்க முடிந்தால்!” (If I Could Talk) படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ (க்ளிக் செய்து பார்க்கவும்!):