திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் – குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. – குறள்: 1 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் – குறள்: 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். – குறள்: 3 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். ஞா. தேவநேயப் பாவாணர் அடியாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் – குறள்: 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – குறள்: 45 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு, அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் – சிறுவர் பகுதி

பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி. அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

கிளியே! – சிறுவர் பகுதி – அழ. வள்ளியப்பா கவிதை

கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை பையன் – கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே? கிளி – இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ? பையன் – இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி – பழங்கள் தாமே தின்னலாம். பட்ச [ மேலும் படிக்க …]

திருக்குறள்

முகநக நட்பது நட்பன்று – குறள்: 786

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு. – குறள்: 786 – அதிகாரம்: நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை இன்முகம்  காட்டுவது  மட்டும்  நட்புக்கு  அடையாளமல்ல:  இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் கண்டவிடத்து அகமன்றி முகம் மட்டும் மலர நட்பது நட்பாகாது; [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் – குறள்: 319

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். – குறள்: 319 – அதிகாரம்: இன்ன செய்யாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவர் பிறர்க்குத் தீயவற்றை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எல்லா விளக்கும் விளக்கல்ல – குறள்: 299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு. – குறள்: 299 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – குறள்: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் வாய்மை அறத்தைத் [ மேலும் படிக்க …]