பாரதிதாசன் கவிதைகள்

படி – நூலைப்படி – பாரதிதாசன் கவிதை

படி! நூலைப்படி – பாரதிதாசன் கவிதை நூலைப்படி – சங்கத்தமிழ்நூலைப்படி – முறைப்படிநூலைப்படி காலையிற்படி கடும்பகல்படிமாலை, இரவு பொருள்படும் படி நூலைப்படி கற்பவை கற்கும்படிவள்ளுவர் சொன்னபடிகற்கத்தான் வேண்டும் அப்படிக்கல்லாதவர் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப் படிஅப்படியே இன்பம் படிஇறந்ததமிழ்நான் மறைபிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள் படி அதன்படிபுறப்பொருள் படி [ மேலும் படிக்க …]

அமிழ்தினும் ஆற்ற இனிதே
திருக்குறள்

அமிழ்தினும் ஆற்ற இனிதே – குறள்: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். – குறள்: 64 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடையகுழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம் [ மேலும் படிக்க …]

குழந்தைப் பாடல்கள்

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை

குறள் படித்தேன் – பாரதிதாசன் கவிதை குறள் படித்தேன் குறள் படித்தேன்குணமடைந்தேன் நான் – தூயகுருதி கொண்டேன் நான்!உறுதி கொண்டேன் நான்! குறள் படித்தேன் குறள் படித்தேன்குறைக ளைந்தேன் நான் – மனக்கொழுமை கொண்டேன் நான் – உயிர்ச்செழுமை பெற்றேன் நான்! அறம் படித்தேன் பொருள்படித்தேன்இன்பம் படித்தேன் – [ மேலும் படிக்க …]

முத்தமிழ்
குழந்தைப் பாடல்கள்

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை

முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை படிப்பும் பேச்சும் இயற்றமிழ்பாடும் பாட்டே இசைத்தமிழ்நடிப்பும் கூத்தும் சேர்ந்ததேநாடகத் தமிழ் என்பார்கள்முடிக்கும் மூன்றும் முத்தமிழேமுத்தமிழ் என்பது புத்தமுதேமுடித்த வண்ணம் நம் தமிழேமுத்தமிழ் என்றே சொல்வார்கள்.

திருக்குறள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் – குறள்: 599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். – குறள்: 599 – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு; கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் – குறள்: 751

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்பொருள்அல்லது இல்லை பொருள். – குறள்: 751 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை மதிக்கத்  தகாதவர்களையும்  மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறரால் ஒரு [ மேலும் படிக்க …]

செய்தக்க
திருக்குறள்

செய்தக்க அல்ல செயக்கெடும் – குறள்: 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானும் கெடும். – குறள்: 466 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் தன் வினைக்குச் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

காலம் கருதி இருப்பர் – குறள்: 485

காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். – குறள்: 485 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகம் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

என்பிலதனை வெயில் போலக் காயுமே – குறள்: 77

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை யறம். – குறள்: 77 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – காளமேகப்புலவர் – தனிப்பாடல்கள்

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை – ககரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கைகோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்காக்கைக்குக் கைக்கைக்கா கா. – ககரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் உரை செய்யுள் அமைதியுடன் [ மேலும் படிக்க …]