திருக்குறள்

மோப்பக் குழையும் அனிச்சம் – குறள்: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்துநோக்கக் குழையும் விருந்து. – குறள்: 90 – அதிகாரம்: விருந்தோம்பல் பால்: அறம் கலைஞர் உரை அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயல்பாக மென்மையாகவுள்ள [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – குறள்: 981 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் – குறள்:71

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும். – குறள்: 71 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பம் காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் – குறள்: 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். – குறள்: 10 – அதிகாரம்: கடவுள் வாழ்த்து, பால்: அறம் கலைஞர் உரை வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

நாலடியார்

ஓதியும் ஓதார் உணர்விலார் – நாலடியார் : 270

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாகநல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்நல்கூர்ந்தார் ஈயார் எனின். – நாலடியார் : 270 – அதிகாரம்: நன்றியில் செல்வம் (பயன்படாத செல்வம்), பால்: பொருள் விளக்கம் இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் ஓதாதவரேயாவர்; இயற்கை யறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடு [ மேலும் படிக்க …]

திருக்குறள்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க – குறள்: 293

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். – குறள்: 293 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. – குறள்: 72 – அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர். ஞா. [ மேலும் படிக்க …]

யாதும் ஊரே யாவரும் கேளிர்
புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192

யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றன் – புறநானூறு: 192 – இயல்தமிழ் யாதும் ஊரே; யாவரும் கேளிர்;தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;சாதலும் புதுவ தன்றே வாழ்தல் (5) இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்இன்னாது என்றலும் இலமே; மின்னொடுவானம் தண்துளி தலைஇ [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இடுக்கண் வருங்கால் நகுக – குறள்: 621

இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். – குறள்: 621 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் வினையாற்றும் போது [ மேலும் படிக்க …]

நான்மணிக்கடிகை

ஒருவன் அறிவானும் எல்லாம் – நான்மணிக்கடிகை: 104

நான்மணிக்கடிகை – 104 – விளம்பி நாகனார் ஒருவன் அறிவானும் எல்லாம் யாதுஒன்றும்ஒருவன் அறியா தவனும் ஒருவன்குணன் அடங்கக் குற்றம் உளானும் ஒருவன்கணன் அடங்கக் கற்றானும் இல். விளக்கம் எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; ஒரு சிறிதும், தெரியாதவன் ஒருவனும் இல்லை; ஒரு நல்லியல்பும் இல்லாமல் பிழையே [ மேலும் படிக்க …]