Thiruvalluvar
திருக்குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று – குறள்: 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. – குறள்: 27 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் – குறள்: 29

குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணம்ஏயும் காத்தல் அரிது. – குறள்: 29 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நற் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அந்தணர் என்போர் அறவோர்மற்று – குறள்: 30

அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்உயிர்க்கும்செந்தண்மை பூண்டுஒழுக லான். – குறள்: 30 – அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம் கலைஞர் உரை அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும்சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

தொல்வரவும் தோலும் கெடுக்கும் – குறள்: 1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை. – குறள்: 1043 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வறுமையென்று சொல்லப்படும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்னாது இரக்கப் படுதல் – குறள்: 224

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகம் காணும் அளவு . – குறள்: 224 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகைபூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – குறள்: 225

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின். – குறள்: 225 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப் பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வசையென்ப வையத்தார்க் கெல்லா – குறள்: 238

வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னுமெச்சம் பெறாஅ விடின். – குறள்: 238 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அதுஅந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வசையிலா வண்பயன் குன்று – குறள்: 239

வசையிலா வண்பயன் குன்று மிசையிலாயாக்கை பொறுத்த நிலம். – குறள்: 239 – அதிகாரம்: புகழ், பால்: அறம் கலைஞர் உரை புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இசை இலா யாக்கை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க – குறள்: 242

நல்ஆற்றான் நாடி அருள்ஆள்க பல்ஆற்றான்தேரினும் அஃதே துணை. – குறள்: 242 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையேவாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உத்திக்குப் பொருத்தமான நல்ல [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் – குறள்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்துஒழுகு வார். – குறள்: 246 – அதிகாரம்: அருள் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை -உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து [ மேலும் படிக்க …]