Virtue
திருக்குறள்

அழுக்காறு அவா வெகுளி – குறள்: 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். – குறள்: 35 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் விளக்கம் பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகியஇந்த நான்கையும் விலக்கி வைத்து நல்வழியில் நடப்பதே அறமாகும்.

Planning
திருக்குறள்

முடிவும் இடையூறும் – குறள்: 676

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

Do not Drink Alcohol
திருக்குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் – குறள்: – 923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி. – குறள்: 923 – அதிகாரம்: கள் உண்ணாமை, பால்: பொருள் விளக்கம் கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

Challenge
திருக்குறள்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் – குறள்: 624

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. – குறள்: 624 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் தடைகள் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் நாம் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு, நமக்கு [ மேலும் படிக்க …]

Challenge
திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் – குறள்: 623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். – குறள்: 623 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் விளக்கம் துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். உதாரணப்பட விளக்கம் விளக்கப் படத்தில் காட்டியுள்ள மீன், அதை [ மேலும் படிக்க …]

Hand-Winnowing
திருக்குறள்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 482

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்தீராமை ஆர்க்கும் கயிறு.      – குறள் – 482 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும். மு. வரதராசனார் உரை காலத்தோடுப் [ மேலும் படிக்க …]

Determination
திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – குறள்: 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

father-and-son
திருக்குறள்

மகன் தந்தைக்காற்றும் உதவி – குறள்: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தைஎன்நோற்றான் கொல்எனும் சொல். – குறள்: 70 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு”, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் – குறள்: 394

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில் – குறள் : 394   – அதிகாரம்: கல்வி, பால்: பொருள்   விளக்கம் யாரோடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, “இனி இவரை என்று காண்போம்?” என்று அவர் ஏங்குமாறு பிரியக் கூடிய தன்மையுடையதே சிறந்த கல்வியாளர் செயலாம். [ மேலும் படிக்க …]

numbers-and-letters
திருக்குறள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப – குறள்:392

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு.          – குறள்: 392                                – அதிகாரம்: கல்வி, பால்: பொருள் விளக்கம்: [ மேலும் படிக்க …]