ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்சினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020
பெங்களூர் ஐஐஎஸ்சி-இல் (IISc, Bangalore) உள்ள பயோசிஸ்டெம்ஸ் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் (Centre for Biosystems Science and Engineering), பிற கல்லூரி மாணவர்களுக்கு 2 மாத பயோ எஞ்சினீயரிங்க் கோடைப்பயிற்சி (BioEngineering Summer Training (BEST) Programme 2020) நடைபெறவுள்ளது. பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு, ரூ. 15,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இளநிலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு வேகமாக வளர்ந்துவரும் உயிர்ப்பொறியியல் (பயோஎஞ்சினீயரிங் – BioEngineering) துறையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும், இந்தத் துறையில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு அளிக்கவும், இந்த கோடைப்பயிற்சியை ஐஐஎஸ்சி அளிக்கிறது. எட்டு வாரங்களுக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சியில், ஆராய்ச்சிக்கான பயிற்சி மற்றும் பலவித பாடவகுப்புகள் உள்ளடங்கும். இரண்டு மாத பயிற்சியின் முடிவில், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் சிறு ஆராய்ச்சிக்கான அறிக்கையை ஒப்படைக்க வேண்டும்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்
- இரண்டமாண்டு அல்லது மூன்றாமாண்டு இளநிலைப் பட்டம் பயிலும் மாணவர்கள் அல்லது முதலாண்டு முதுநிலை மாணவர்கள்
- பயோஎஞ்சினீயரிங் துறை ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைத்து துறைகளைச் சார்ந்த மாணவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி காலம் – 25-மே-2020 முதல் 24-ஜூலை-2020 வரை
விண்ணப்பிக்க இறுதித் தேதி: 14-பிப்ரவரி-2020
மேலும் விவரங்களுக்கு, இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science, Bangalore) கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தைப் பார்க்கவும்:
(பயோஎஞ்சினீரிங்க் கோடைப்பயிற்சித் திட்டம் 2020) BioEngineering Summer Training (BEST) Programme 2020