அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Sciences) – AIIMS நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான (AIIMS – MBBS-2019) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புது டெல்லியில் உள்ள AIIMS நிறுவனம் மற்றும், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மற்ற பதினான்கு AIIMS நிறுவனங்களில் இளநிலை மருத்துவம் (MBBS) படிக்க விரும்பும் மாணவர்கள், இந்த நுழைவுத் தேர்வைத் தவறாமல் எழுத வேண்டும்.
அதாவது, புது டெல்லியில் உள்ள AIIMS நிறுவனம் மற்றும், பாதிந்தா, போபால், புவனேஸ்வர், தியோர்கா, கோரக்பூர், ஜோத்பூர், கல்யாணி, மங்கலகிரி, நாக்பூர், பாட்னா, ராய்பூர், ரே பரேலி, ரிஷிகேஷ் மற்றும் தெலுங்கானா போன்ற நகரங்களில் உள்ள AIIMS நிறுவனங்களில் சேர்ந்து இளநிலை மருத்துவம் (MBBS) படிக்க, AIIMS மருத்துவ நுழைவுத்தேர்வை எழுத வேண்டும்.
30-நவம்பர்-2018 முதல் 03-ஜனவரி-2019 வரை, இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்யலாம்.
கல்வித் தகுதி
ஆங்கிலம் (English), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), மற்றும் உயிரியல் (Biology) போன்ற பாடங்களை, பனிரெண்டாம் வகுப்பில் (10+2 / Higher Secondary Course – HSC / Senior Secondary Course – SSC) படிக்கும் (அல்லது படித்த) மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.
தேர்வு நாள்
ஒரு நாளுக்கு இரண்டு வேளைகள் என்று, 25-மே-2019 மற்றும் 26-மே-2019 ஆகிய தேதிகளில் இந்த மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. AIIMS இதில் ஏதேனும் ஒரு நாள் மற்றும் தேர்வு நேரம் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு
மேலும், MBBS-2019 சேர்க்கைக்கான, AIIMS மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான, கல்வித் தகுதி, இணையவழிப் பதிவு பற்றிய வழிமுறைகள், முக்கிய தேதிகள், விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை அறிய, கீழ்க்கண்ட இணைய முகவரிகளைப் பார்க்கவும்:
- இந்த முகவரியை க்ளிக் செய்து அல்லது தொட்டு, AIIMS தேர்வுகள் இணையதளத்தின் முக்கிய அறிவிப்புகள் பகுதியைப் பார்க்கவும்.
- AIIMS நிறுவனம் பற்றி பொதுவான விவரங்களை அறிந்து கொள்ள, இந்த முகவரிய க்ளிக் செய்யவும் அல்லது தொடவும்.
AIIMS மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான புதிய அறிவிப்புகள் அல்லது மாற்றங்கள் பற்றி அறிய, AIIMS தேர்வுகள் இணையதளத்தைத் தொடர்ந்து பார்க்கவும்.