மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2019 National Eligibility Cum Entrance Test (NEET (UG) – 2019)
தேசிய தேர்வுக் குழு (National Testing Agency – NTA) நடத்தும் மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) தேர்வுக்கான பதிவுகள் இணைய வழியே செய்யப்படுகின்றன. நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) என்பது பொது மருத்துவ (Medicine – MBBS) மற்றும் பல் மருத்துவ (Dental – BDS) இளநிலை பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக இந்திய அளவில் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு.
பனிரெண்டாம் வகுப்பு (10+2 / Higher Secondary Course – HSC / Senior Secondary Course – SSC) படி க்கும் அல்லது முடித்த மாணவர்கள், இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) (அல்லது பயோ-டெக்னாலஜி / Bio-Technology) ஆகிய பாடங்களை 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் படித்து இருப்பின், அவர்கள் நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான பதிவுகள் இணைய வழியே 01-நவம்பர்-2018 முதல் நடைபெற்று வருகின்றன. பதிவுகள் 07-டிசம்பர்-2018 அன்று முடிவடைகின்றன. AIIMS மற்றும் JIPMER ஆகிய மருத்துவக் கல்வி நிறுவனங்களைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி / நிறுவனங்களில் சேர்ந்து இளநிலைப் பொது மருத்துவம் (Medicine – MBBS) அல்லது பல் மருத்துவம் (Dental – BDS) படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வைத் தவறாமல் எழுத வேண்டும். நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) தேர்வு 05-மே-2019 அன்று நடைபெற உள்ளது.
மேலும் நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) தொடர்பான, கல்வித் தகுதி, இணையவழிப் பதிவு பற்றிய வழிமுறைகள், தேர்வுக்கான பாடத்திட்டம், முக்கிய தேதிகள், விண்ணப்பக் கட்டணம் போன்ற விவரங்களை அறிய, கீழ்க்கண்ட இணைய முகவரிகளைப் பார்க்கவும்:
- நீட் (இளநிலை) – 2019 (NEET (UG) – 2019) – இணைய தளம் மற்றும் விண்ணப்பப் பதிவு (Website and Registration)
-
தேசிய தேர்வுக் குழு – National Testing Agency (NTA)
-
தேசியத் தேர்வுக் குழு (NTA) நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, ஐ.ஐ.டி (IIT) பேராசியர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் நடத்தும் வீடியோ பாட வகுப்புகளை (VIDEO LECTURES) வெளியிட்டுள்ளது.