SiB – iFellowship 2019 – மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), வடிவமைப்பு (Design), மற்றும் வணிகத்தில் (Business) இளநிலை / முதுநிலைப் பட்டதாரிகளுக்கான எஸ்.ஐ.பி. ஃபெலோஷிப்
பன்னாட்டு உயிர்ம-வடிவமைப்புக் கூடம் (ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB), மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering), வடிவமைப்பு (Design), மற்றும் வணிகம் (Business) போன்ற துறைகளில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடமிருந்து, ஓர் ஆண்டு ஃபெலோஷிப்-க்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தத் திட்டம், இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கான மருத்துவ தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிர்மத்தொழில்நுட்ப துறை (Deparment of Biotechnology) இந்தத் திட்டத்தை (ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB) செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் ஸ்டான்ஃபோர்ட் – இந்தியா உயிர்ம வடிவமைப்புத் (பயோடிசைன்) திட்டத்தின் (ஆண்டு 2007-2014) வெற்றியின் பயனாக உருவானது. இந்த உயிர்மத் தொழிநுட்பப் புதுமைக் கண்டுபிடிப்புத் திட்டமானது (Biomedical Technology Innovation Programme), புதுடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS, New Delhi) மற்றும் டெல்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) ஆகிய நிறுவனங்களில், பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களின் கூட்டுடன் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
பன்னாட்டு உயிர்ம-வடிவமைப்புக் கூடம் (ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB), இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஆண்டிற்கு இருமுறை செயலாக்க உறுப்பினர்களைத் (Fellows) தேர்ந்தெடுக்கிறது. இந்த ஓர் ஆண்டு முழு நேர ஃபெலோஷிப் திட்டம், ஜூலை-2019-ல் தொடங்குகிறது.
இந்த ஃபெலோஷிப் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மாதம் தோறும் ரூபாய். 60,000 உதவித்தொகை பெறுவர். மேலும், பயணப் படி, மற்றும் உடல்நலத் திட்டங்கள் போன்ற சலுகைகளும் உண்டு.
விண்ணப்பிக்க இறுதி நாள்
இந்தத் திட்டதிற்கு விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய இறுதி நாள்: 31-மே-2019.
மேலும், கல்வித் தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை, இணைய வழி விண்ணப்பப் பதிவு முறை, நிறுவனத்தின் ஆராய்ச்சிச் செயல்பாடுகள் போன்ற விவரங்களை அறிய, கீழ்க்கண்ட ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்:
ஸ்கூல் ஆஃப் இண்டெர்நேஷனல் பயோடிசைன் – School of International Biodesign – SiB
பிற பயனுள்ள இணைய முகவரிகள்
இந்தத் தகவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண கீழ்கண்ட இணைய முகவரியைப் பார்க்கவும்: