தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2019 (Tamilnadu Engineering Admissions 2019 – TNEA 2019)
பன்னிரெண்டாம் வகுப்பு (+2) முடித்த மாணவர்களுக்கான, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளை ( Tamilnadu Engineering Admissions – TNEA 2019) இந்த ஆண்டு (2019), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பில் (+2) கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடங்களை படித்த மாணவர்கள், மற்றும் தொழில் கல்வி (Vocational Stream) பயின்ற மாணவர்கள், கீழ்க்கண்ட கல்லூரிகளில் சேர்ந்து இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பு படிப்பதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
- அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரிகள்:
- கிண்டி பொறியியல் கல்லூரி – காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங், கிண்டி (College of Engineering, Guindy Campus)
- மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை – மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Madras Institute of Technology, Chrompet Campus)
- அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கிண்டி – அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி (Alagappa College of Technology, Guindy Campus)
- கட்டடக் கலை மற்றும் திட்டக் கல்லூரி , கிண்டி – ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளானிங் (School of Architecture and Planning, Guindy Campus)
- அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள் (Constituent Colleges of Anna University)
- அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் (Colleges affiliated to Anna University):
- அரசுப் பொறியியல் கல்லூரிகள் (Government Engineering Colleges)
- அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் (Govt. Aided Engineering Colleges)
- தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள் (Self-Financing Private Engineering Colleges)
தமிழ்நாடு பொறியியல் (B.E / BTech) சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணைய வழியில், மே மாதம் இரண்டாம் தேதி (02-05-2019) முதல் மே மாதம் முப்பத்தியொன்றாம் தேதி (31-05-2019) வரை நடைபெறும். இந்த ஆண்டு (2019), தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மற்றும் கலந்தாய்வு முழுவதும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால், இணைய வழியாக நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வெளியில் எங்கிருந்து வேண்டுமானாலும், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள், “தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்” (TNEA Facilitation Centers – TFC) உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இந்த உதவி மையங்களின் பட்டியலை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பார்க்கலாம்:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்
இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவை கீழ்க்கண்ட இணைய முகவரியில், செய்யலாம்:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2019 (Tamilnadu Engineering Admissions 2019 – TNEA 2019)
B.Arch (Architecture) பி.ஆர்க் (கட்டடக் கலை) படிப்புக்கான சேர்க்கை பின்னர் அறிவிக்கபடும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் (DOTE) B.E / B.Tech பட்டப் படிப்பு சேர்க்கை 2019-2020 விளம்பர அறிக்கையில் (9799/ECA1/2019) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதிக தகவலுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தைப் பார்க்கலாம்:
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (Directorate of Technical Education – DOTE)
பொறியியல் பிரிவுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் குருவிரொட்டியின் கல்வி பகுதியில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.