குருவிரொட்டி இணைய இதழ்

NTA நடத்தும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான JEE (Main) – Apr-2020 தேர்வு

JEE (Main) – Apr-2020

தேசிய தேர்வுக்குழு (National Testing Agency – NTA) நடத்தும் JEE (Main) – Apr-2020 தேர்வுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் / முடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த தேர்வு 2019-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஏப்ரல்) நடக்கின்றன.

என்.ஐ.டி. (NITs), IIITs (ஐ.ஐ.ஐ.டி), மற்றும் மத்திய நிதி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTIs) போன்ற கல்வி நிறுவங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை என்.டி.ஏ. (NTA) நடத்தி வருகிறது. ஐஐடி-களில் (IITs) சேர விரும்பும் மாணவர்கள், JEE (Advanced) எனும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். ஆனால், அதற்கு முன் JEE (Main) தேர்வில் அவர்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், சில மாநில கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் JEE (Main) தேர்வைத் தகுதித் தேர்வாகக் கொண்டுள்ளன.

புதிதாக எழுதும் மாணவர்கள் மட்டும் அல்லாது, முந்தைய JEE (Main) தேர்வு எழுதி மறுமுயற்சி செய்து மேம்பட விரும்பும் மாணவர்களும் ஏப்ரல் 2020-ல் நடக்க இருக்கும் இந்த தேர்வை எழுதலாம்.

NTA இணையதளத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 06-மார்ச்-2020

மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு நடக்கும் தேதி மற்றும் நேரம், தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகிய விவரங்களை அறிய, கீழே உள்ள NTA-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சொடுக்கிப் பார்க்கவும்:

JEE (Main) – Apr-2020-க்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுப்பக்கம்


தேர்வுக்கு ஆயத்தமாக உதவும் பிற இணைய முகவரிகள்