பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், பெரும்பான்மையான மாணவர்கள் மனதில் எழும் கேள்வி… அடுத்து என்ன படிக்கலாம்?
இந்த இதழில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2018 – க்கான விவரங்களைப் பார்ப்போம்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2018 (Tamilnadu Engineering Admissions 2018 – TNEA 2018):
பன்னிரெண்டாம் வகுப்பில் (+2) கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடங்களை படித்த மாணவர்கள், கீழ்க்கண்ட கல்லூரிகளில் சேர்ந்து இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பு படிப்பதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
- அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள்
- அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள
- அரசுப் பொறியியல் கல்லூரிகள்
- அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்
- தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள்
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவுகள் இணைய வழியில், மே மாதம் மூன்றாம் தேதி (03-05-2018) தொடங்கின. இணைய வழி விண்ணப்பப் பதிவுகள் மே மாதம் முப்பதாம் தேதி (30-05-2018) முடிவடைகின்றன. இந்த ஆண்டு (2018), தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மற்றும் கலந்தாய்வு முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தால், இணைய வழியாக நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வெளியில் எங்கிருந்து வேண்டுமானாலும், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி இல்லாதவர்கள், “தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்” (TNEA Facilitation Centers – TFC) உதவியுடன் விண்ணப்பிக்கலாம். இந்த உதவி மையங்களின் பட்டியலை கீழ்க்கண்ட இணைய முகவரியில் பார்க்கலாம்:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள்
இளநிலைப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பப் பதிவை கீழ்க்கண்ட இணைய முகவரியில், செய்யலாம்:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகள் 2018 (Tamilnadu Engineering Admissions 2018 – TNEA 2018)
கடந்த மூன்று ஆண்டுகளில், வெவ்வேறு பொறியியல் கல்லூரி மற்றும் பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான குறைந்த பட்ச மதிப்பெண் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கலாம்:
குறைந்த பட்ச மதிப்பெண் (Minimum Cut-Off)
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளின் பட்டியலைக் கீழ்க்கண்ட இணைய முகவரியில் பார்க்கலாம்:
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதிக் கல்லூரிகளின் பட்டியல்
மேலும் அதிக தகவலுக்கு, அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தைப் பார்க்கலாம்:
அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)
அடுத்த பகுதியில் (பகுதி-2), பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம். (தொடரும்….)