முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் – (நிலை – I – Grade – I) தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB)

Teachers Recruitment Board

2144 காலியிடங்கள் – முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை – I – Grade – I) தேவை – ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB)

ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board – TRB), முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் (PG Teaching Assitants), உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை – I – Grade – I) (Physical Education Directors – Grade-I) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • பதவி: முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை – I – Grade – I)
  • மொத்த காலியிடங்கள்: 2144
  • ஊதியம்: Rs.36900 – 116600 (Level – 18) – குறைந்தபட்ச ஊதியம் -Rs.36900
  • முதுநிலை பட்டதாரி உதவி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி: (1) முதுநிலை (PG) மற்றும் இளநிலை (UG) பட்டப் படிப்புகளில் ஒரே பாடம் அல்லது அதற்கு இணையான பாடம் சிறப்புப் பாடமாக இருக்க வேண்டும். (2) பல்கலைக்கழக இளநிலைக் கல்விப் பட்டப்படிப்பு (B.Ed) அல்லது அதற்கு இணையான கற்பித்தல் படிப்பு
  • உடற்கல்வி இயக்குநர் (நிலை – I – Grade – I) பணிக்கான கல்வித் தகுதி: முதுநிலை உடற்கல்வி (M.P.Ed) அல்லது அதற்கு இணையான பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பு (Diploma equivalent to M.P.Ed)
  • இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 15-ஜூலை-2019

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணைய முகவரியைப் பார்க்கவும்:

ஆசிரியர் தேர்வு வாரியம் – Teachers Recruitment Board – TRB (http://www.trb.tn.nic.in/)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.