- திரவங்களின் கீழ்பகுதியில் உள்ள அழுத்தம் மேல்பகுதியில் உள்ளதைவிட, எவ்வாறு இருக்கும்?
- விடை: அதிகமாக.
- மிதப்பு விசையானது பாய்மங்களின் எவை இரண்டையும் சார்ந்தது?
- விடை: பருமன் மற்றும் அடர்த்தி.
- பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?
- விடை: பால்மானி (லேக்டோமீட்டர் – Lactometer).
- எதிரொலியைத் தெளிவாகக் கேட்கவேண்டுமானால், எதிரொலிக்கும் பரப்பு ஒலி மூலத்திலிருந்து குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொலைவு என்ன?
- விடை: 17 மீ
- செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
- விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை.
- சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
- விடை: புதன்
- வெள்ளி கோளில் சூரியன் உதிக்கும் திசை எது?
- விடை: மேற்கு
- நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை என்ன?
- விடை: 8
- சூரியன் ஒரு விண்மீனா?
- விடை: ஆம். சூரியன் ஒரு விண்மீன்.
- சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களுக்கு என்ன பெயர்?
- விடை: வால்விண்மீன்
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு