- பொருள் அல்லது மனிதர்கள் எடையற்றுப் இருப்பதுபோல் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?
- விடை: நுண் ஈர்ப்பு
- SI எனப்படும் பன்னாட்டு அலகு முறையின் விரிவாக்கம் என்ன?
- விடை: International System of Units
- நீளம், நிறை மற்றும் காலத்தின் SI அலகுகள் என்ன?
- விடை: மீட்டர் (m), கிலோகிராம் (kg), வினாடி (s) (செகண்ட்) அதாவது mks
- ஒருபொருளின் தோற்றநிலையை இருவேறு பார்வைக்கோடுகளின் வழியே நோக்கும்போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: இடமாறு தோற்றப்பிழை (Parallax Error)
நினைவில் கொள்க!
அளவீடுகள்
- நீளம் / தூரம்:
- 1 மீட்டர் (மீ) = 100 சென்டிமீட்டர் (செ.மீ) = 1000 மில்லி மீட்டர் (மி.மீ)
- 1 சென்டிமீட்டர் (செ.மீ) = 10 மில்லி மீட்டர் (மி.மீ)
- 1 கிலோமீட்டர் (கி.மீ) = 1000 மீட்டர் (மீ).
- நிறை:
- 1 கிலோகிராம் (கி.கி) = 1000 கிராம் (கி)
- 1 கிராம் = 1000 மில்லி கிராம் (மி.கி)
- காலம்:
- 1 நிமிடம் = 60 வினாடி (செகன்ட்)
- 1 மணி நேரம் = 60 நிமிடங்கள் = 3600 வினாடிகள்
- ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறியப் பயன்படும் முறை எது?
- விடை: நீர் இடப்பெயர்ச்சி முறை
- ஒரு பொருள் அதன் அச்சினை மையமாக கொண்டு இயங்கினால், அவ்வியக்கம் எது?
- விடை: தற்சுழற்சி இயக்கம்
- தானாகக் கீழேவிழும் பொருளின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
- விடை: நேர்க்கோட்டு இயக்கம்.
- பம்பரத்தின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
- விடை: தற்சுழற்சி இயக்கம்
- சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு நிலைக்கு என்ன பெயர்?
- விடை: பிளாஸ்மா நிலை
- மிகக்குறைவான் தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?
- விடை: போஸ் நிலை
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு