- மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
- விடை: அம்மீட்டர்
- மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி எது?
- விடை: வோல்ட்மீட்டர்
-
துணை மின்கலன்களில் உருவாகும் வேதிவினையானது எவ்வகை வினை?
- விடை: மீள்வினை
- சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளில் பயன்படும் குறைக்கடத்திகள் எவை?
- விடை: சிலிகான் மற்றும் ஜெர்மேனியம்
- ஆவியாதல் திரவத்தின் எப்பகுதில் மட்டும் நிகழ்வதாகும்?
- விடை: புறப்பரப்பில்
- திண்ம நிலையில் இருந்து வாயு நிலைக்கு பொருள்கள் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?
- விடை: பதங்கமாதல்
- ஆவியாதல், கொதித்தல், ஆவி சுருங்குதல், உருகுதல் மற்றும் உறைதல் ஆகிய நிகழ்வுகள் எவ்வகையான நிகழ்வுகள்?
- விடை: இயற்பியல்
- பிரித்தெடுக்கும், தூய்மையாக்கும் முறை என்பது என்ன?
- விடை: படிகமாக்குதல்
- ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சர்க்கரைக் கரைசல் ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?
- விடை: நொதித்தல்
- தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு உருவாகுவது எது?
- விடை: வனஸ்பதி
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு