- தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருவது எது?
- விடை: செல்லுலோஸ்
- விலங்கு செல்களில், செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுவது எது?
- விடை: சென்ட்ரியோல் (Centrioles)
-
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
-
விடை: உட்கரு
-
- ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
- விடை: R.H விட்டேக்கர்
-
வேப்ப மரத்தின் இருசொற் பெயர் என்ன?
- விடை: அசாடிரேக்டா இண்டிகா
-
ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்டுகிறது?
- விடை: ஒளிச்செறிவு
- ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
- விடை: கேண்டிலா
- ஒளியின் திறனுக்கான SI அலகு என்ன?
- விடை: லுமென் (lumen)
- திண்மக் கோணத்தின் SI அலகு என்ன?
- விடை: ஸ்ட்ரேடியன்
- எதனை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள செயல்படுகின்றன?
- விடை: அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை.
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு