- குவார்ட்ஸ் கடிகாரங்கள் எந்த அலைவுகள் மூலம் இயங்குகின்றன?
- விடை: மின்னணு அலைவுகள் (Electronic Oscillations)
- எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை எது?
- விடை: உந்து விசை
- திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி எது?
- விடை: மானோமீட்டர்
- தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணமான விசை?
- விடை: பரப்பு இழுவிசை
- தாவர வேர்கள் நீர் மூலக்கூறுகளை உறிஞ்சுகிறது. எதன் மூலம் “நுண்புழை ஏற்றம்” என்ற செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது?
- விடை: சைலம் என்ற மெல்லிய குழாய்
- திரவத்துளிகள் எவ்வாறு கோள வடிவத்தை பெறுகின்றன?
- விடை: ஒரு குறிப்பிட்ட பருமனிற்கு மிகச்சிறிய புறப்பரப்பு தரும் வடிவம் கோள வடிவம் ஆகும்.
- நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்கக் காரமான விசை எது?
- விடை: நீரின் பரப்பு இழுவிசை
- டார்ச் விளக்குகளில் பயன்படும் ஆடிகள் எவை?
- விடை: குழிஆடிகள்
- சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் பயன்படும் ஆடிகள் எவை?
- விடை: குவி ஆடிகள்
- உடல் உள்உறுப்புக்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி எது?
- விடை: ஒளியிழை பெரிஸ்கோப்
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு