-
தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
-
விடை: கரிமச் சேர்மங்கள்
-
-
வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் வினைவேக மாற்றியாக பயன்படுவது எது?
-
விடை: நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்
-
-
என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
-
விடை: உயிரி வினைவேக மாற்றிகள்
-
-
ஒரு உணவில் துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்ற நிகழ்வுகளால் உணவின் தரம் குறைய காரணமாக அமையும் உயிரி வினைவேகமாற்றி எது?
-
விடை: என்சைம்
-
-
முட்டைகள் அழுகும்பொழுது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?
-
விடை: ஹைட்ரஜன் சல்பைடு
-
-
செல்கள் பாலிஃபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைமைக் கொண்டுள்ளன. இவை ஆக்சிஜனுடன் தொடர்புக்கு வரும்பொழுது பழங்களிலுள்ள ஃபீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன. இப்பழுப்பு நிறமிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
-
விடை: மெலனின்
-
-
வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி எது?
-
விடை: மெலனின்
-
-
வைரஸ் என்பது எவற்றால் ஆனது?
-
விடை: மரபுப் பொருள் மற்றும் புரதத்தால்
-
-
வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை?
-
விடை: 10,000
-
-
பாக்டீரியாவில் இருவகை எவை?
-
விடை: (1) காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது). (2) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)
-
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு