பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. எந்த வகை பாக்டீரியாக்கள் தமது உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன?
    • விடை: ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்கள்
  2. ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு?
    • விடை: சயனோபாக்டீரியா
  3. பல செல்களால் ஆன பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: பெனிசிலியம்
  4. பூஞ்சைகளைப் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?
    • விடை: மைக்காலஜி
  5. ஒரு செல்லாலான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: ஈஸ்ட்
  6. ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் நொதிக்குப் பெயரென்ன? 
    • விடை: சைமேஸ் 
  7. ஒரு செல்லாலான, நகரும் திறனுடைய நன்னீர் வாழ் பாசிக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: கிளாமிடோமோனாஸ். 
  8. அமீபா எதன் மூலம்  மூலம் இடம் பெயர்கிறது?
    • விடை: போலிக் கால்கள்
  9. உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா எவை?
    • விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் போன்றவை 
  10. பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயரென்ன? 
    • விடை: ரைசோபியம் 

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.