- காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பாக்டீரியா எது?
- விடை: மெத்தனோ பாக்டீரியா
- மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்கழிவுகள், தாவரங்களின் கழிவுகள், காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும் போது மீத்தேனுடன் (உயிரி வாயு) சேர்ந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனும் உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள் எவ்வாறு என்றழைக்கப்படுகின்றன?
- விடை: மெத்தனோஜென்கள்
- லினென் நூலிழைகள் தயாரிக்கப்படுதலில் பயன்படும் நுண்ணுயிரி எது?
- விடை: சூடோமோனாஸ் ஏருஜினோஸா
- பாலில் உள்ள லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா எது?
- விடை: லேக்டோ பேசில்லஸ்
- பாலைத் தயிராக்க உதவும் பாக்டீரியா எது?
- விடை: லேக்டோ பேசில்லஸ்
- லாக்டிக் அமில பாக்டீரியா என்றழைக்கப்படும் பாக்டீரியா எது?
- விடை: லேக்டோ பேசில்லஸ்
- வைரஸினால் உண்டாகும் ஃப்ளூ காய்ச்சல் எதன் மூலம் பரவுகிறது?
- விடை: காற்றின் மூலம்
- விலங்குகளின் வாய் மற்றும் கால்க் குளம்புளில் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
- விடை: ஆப்ரோ வைரஸ்
- தாவர நோயான சிட்ரஸ் கேன்சர் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
- விடை: சாந்தோமோனஸ்ஆக்ஸனோபோடிஸ் (பாக்டீரியா)
- உருளைக்கிழங்கு பிளைட் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
- விடை: பைட்டோபைத்தோரா இன்ஃபெஸ்டென்ட்ஸ் (பூஞ்சை )
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு