- மாமரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
- விடை: மாஞ்சிஃபெரா இன்டிகா
- இந்தியாவில் மிகப்பெரிய உலர்தாவரத்தொகுப்பு (Herbarium) எங்கு உள்ளது?
- விடை: கல்கத்தா
- ஒரு செல் உயிரியில் நகர்ந்து செல்லக்கூடிய பாசி எது?
- விடை: கிளாமைடோமோனஸ்
- குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்ட பாசிகள் எவை?
- விடை: வால்வாக்ஸ்
- வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் பாசிக்கு எடுத்துக்காட்டு?
- விடை: லேமினேரியா, அஸ்கோஃபில்லம்
- மக்கள் உணவாக உட்கொள்ளும் பாசிகள் எவை?
- விடை: அல்வா, ஸ்பைருலினா, குளோரெல்லா
- மண்ணின் வளத்தை அதிகரிக்க பயன்படும் பாசிகள் எவை?
- விடை: நாஸ்டாக், அனபீனா
- விண்வெளிப் பயணத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படும் பாசிகள் எவை?
- விடை: குளோரெல்லா ஃபைரினாய்டோசா
- புரதத்தை உற்பத்தி செய்யும் பாசிகள் எவை?
- விடை: குளோரெல்லா, ஸ்பைருலினா
- வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் (பூஞ்சைகள்) எவை?
- விடை: செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா.
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு