பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் ஓய்வுநிலைக்கு வருவதற்கு காரணம் என்ன?
    • விடை: விசை
  2. இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், வேகத்தைக் குறைக்கவும் எது தேவைப்படுகிறது?
    • விடை: விசை
  3. நகரும் பொருளின் திசையை மாற்ற உதவுவது எது?
    • விடை: விசை
  4. பொதுவாக விசை என்பது எப்படி பொருள் கொள்ளப்படுகிறது?
    • விடை: தள்ளுதல் அல்லது இழுத்தல்
  5. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடத்திற்கு என்ன பெயர்?
    • விடை: இயந்திரவியல் (Mechanics)
  6. இயந்திரவியலின் இரண்டு பிரிவுகள் எவை?
    • விடை: நிலையியல் (Statics) மற்றும் இயங்கியல் (Dynamics)
  7. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?
    • விடை: நிலையியல் (Statics)
  8. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?
    • விடை: இயங்கியல் (Dynamics)
  9. இயங்கியலின் (Dynamics) இரு பிரிவுகள் யாவை?
    • விடை: இயக்கவியல் (Kinematics) மற்றும் இயக்கவிசையியல் (Kinetics)
  10. இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்கும் அறிவியல் எது?
    • விடை: இயக்கவியல் (Kinematics)

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.