- பொருளின் இயக்கத்தையும் அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்கும் அறிவியலுக்குப் பெயரென்ன?
- விடை: இயக்கவிசையியல் (Kinetics)
- விசை சார்பற்ற இயக்கத்தை (இயற்கையான இயக்கம்) வரையறுத்தவர் யார்?
- விடை: அரிஸ்டாட்டில்
- ஒரு பொருள், தன் மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தனது ஓய்வு நிலை, அல்லது தான் சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையில் மாற்றம் ஏற்படுவதை எதிர்க்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: நிலைமம்
- நிலைமத்தின் வகைகள் யாவை?
- விடை: ஓய்வில் நிலைமம், இயக்கத்தில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம்
- நீளம் தாண்டுதலில், போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தான் தாண்டும் முன், சிறிது தூரம் ஓடுவதற்குக் காரணம் என்ன?
- விடை: இயக்கத்திற்கான நிலைமம்
- ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் என்ன?
- விடை: திசைக்கான நிலைமம்
- கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் எவற்றிற்கான எடுத்துகாட்டு?
- விடை: ஓய்விற்கான நிலைமம்
- ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை எதன் மூலம் அளவிடலாம்?
- விடை: நேர்க்கோட்டு உந்தத்தின் மூலம் (Linear Momentum)
- இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படும்?
- விடை: உந்தம்
- உந்தத்தின் திசை எவ்வாறு இருக்கும்?
- விடை: திசைவேகத்தின் திசையிலேயே
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு