பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. உந்தம் என்பது எவ்வகையான அளவு?
    • விடை: வெக்டார்
  2. விசையின் எண் மதிப்பானது எதனால் அளவிடப்படுகிறது?
    • விடை: உந்தத்தால்
  3. உந்தத்தின் SI அலகு என்ன?
    • விடை: கிகி மீவி-1 (அதாவது, கிகி.மீ /வி)
  4. திசைவேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் எப்படி இருக்கும்?
    • விடை: அதிகமாகும்.
  5. உந்தத்திற்கான சமன்பாடு என்ன?
    • விடை: உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v). அதாவது, p = mv
  6. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும். இந்த விதியின் பெயரென்ன?
    • விடை: நியூட்டனின் முதல் விதி
  7. நியூட்டனின் முதல் விதி எவற்றை விளக்குகிறது?
    • விடை: விசையையும், பொருட்களின் நிலைமத்தையும்
  8. விசை எவ்வகையான அளவு?
    • விடை: எண்மதிப்பும் திசையும் கொண்ட வெக்டார் அளவு
  9. விசைகளின்யின் இரு வகைகள் யாவை?
    • விடை: ஒத்த இணைவிசைகள், மாறுபட்ட இணைவிசைகள்
  10. சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது ஒரே திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?
    • விடை: ஒத்த இணைவிசைகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.