பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது எதிரெதிர் திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?
    • விடை: மாறுபட்ட இணைவிசைகள்
  2. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசைக்கு என்ன பெயர்?
    • விடை: தொகுபயன் விசை (Resultant Force)
  3. தொகுபயன் விசையின் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டர் கூடுதலுக்கு எவ்வாறு இருக்கும்?
    • விடை: சமமாக இருக்கும்
  4. ஒரு பொருளின் மீது செயல்படும் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியாக இருந்தால், அதிலிருந்து நாம் என்ன அறியலாம்?
    • விடை: பொருள் சமநிலையில் உள்ளதென்று அறியலாம்
  5. தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் அவ்விசைகளுக்கு என்ன பெயர்?
    • விடை: சமன் செய்யப்பட்ட விசைகள் (Balanced Forces)
  6. ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், என்னவாகும்?
    • விடை:  அவை பொருளின் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கும்.
  7. ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், அவ்விசைகளுக்கு என்ன பெயர்?
    • விடை: சமன் செய்யப்படாத விசைகள்
  8. கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, எதற்கான எடுத்துக்காட்டு?
    • விடை: சமன் செய்யப்படாத விசைகள்
  9. சமன் செய்யப்படாத விசைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் என்ன?
    • விடை: கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை
  10. பொருட்களை சமநிலைக்கு கொண்டுவர உதவும், தொகுபயன் விசைக்குச் சமமான, ஆனால், எதிர்த்திசையில் செயல்படும் விசைக்கு என்ன பெயர்?
    • விடை: எதிர்சமனி (Equilibrant)

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.