- வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் எது?
- விடை: முகுளம்
- இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குவது எது?
- விடை: நிணநீர்
- இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ கருவி எது?
- விடை: ஸ்பிக்மோமானோ மீட்டர்
- ஆரோக்கியமான மனிதன் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் என்ன?
- விடை: 120 mmHg / 80 mmHg
- இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்?
- விடை: 0.8 வினாடி
- இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகளின் வாழ்நாள் எவ்வளவு காலம்?
- விடை: 8-10 நாட்கள்.
- இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது எரித்ரோசைட்டுகளின் வாழ்நாள் என்ன?
- விடை: 120 நாட்கள்
- கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு என்ன?
- விடை: பெக்கொரல்
- யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்?
- விடை: மார்ட்டின் கிலாபிராத்
- புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவும் விதி எது?
- விடை: நியூட்டனின் ஈர்ப்பியல் விதி.
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு