பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் யாவை?
    •  விடை: நியூட்டனின் மூன்றாம் விதிமற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
  2. மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை எது?
    • விடை: கணத்தாக்கு(Impulse) விசை.
  3. பறவைகள் பறக்க பயன்படும் விதி எது?
    • விடை: நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
      • விடை: 3 × 108 மீ/வி
  5. கண்ணுறு ஒளியில் அதிக அலை  நீளம் கொண்ட நிறம் எது?
    • விடை: சிவப்பு.
  6. மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க காரணம் எது?
    • விடை: மீ-சிதறல் 
  7. ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு எது?
    • விடை: டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு
  8. குவிலென்சு என்பது யாது?
    • விடை: குவிக்கும் லென்சு
  9. நுண்ணோக்கிகள் பயன்படும் லென்சு எது?
    • விடை: குவி்லென்சு.
  10. தூரப்பார்வை பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப்பயன்படும் லென்சு எது?
    • விடை: குவி்லென்சு. 

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.