பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. குழிலென்சு என்பது யாது?
    • விடை: விரிக்கும் லென்சு
  2. வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத்துளைகளில் பொருத்தப்படும் லென்சு எது?
    • விடை: குழிலென்சு.
  3. லென்சின் திறனின் SI அலகு எது? 
    • விடை: டையாப்டர்.
  4. மையோபியாவின் மற்றொரு பெயர் என்ன?
    • விடை: கிட்டப்பார்வை
  5. தூரப்பார்வை என்று அழைக்கப்படும் (ஹைப்பர் மெட்ரோபியா) குறைபாடு எதனால் ஏற்படுகிறது? 
    • விடை: விழிக்கோளம் சுருங்குவதால்.
  6. எந்த வகையான மின் இணைப்பில் ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும்?
    • விடை: பக்க இணைப்பு.
  7. ஒரு குதிரைத் திறனின் அளவு என்ன?
    • விடை: 746 வாட்.
  8. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?
    • விடை: அதிகரிக்கிறது.
  9. எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு என்ன?
    • விடை: 17.2 மீ 
  10. ஒலியின் திசைவேகம் காற்றில் என்ன?
    • விடை: 344 மீ/வி

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.