பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

  1. முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
    • விடை: கதிரியக்க அயோடின்-131 (I131)
  2. தோல் புற்று நோயைக் குணப்படுத்தப்பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
    • விடை: கதிரியக்கக் கோபால்ட்-60 (Co60) மற்றும் தங்கம்-198 (Au198)
  3. பாதுகாப்பானகதிர்வீச்சின் அளவு ஒரு வாரத்திற்கு என்ன?
    • விடை: 100 மில்லி ராண்ட்ஜன்
  4. தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கழி எது?
    • விடை: போரான் மற்றும் காட்மியம்
  5. ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
    • விடை: அணுக்கரு இணைவு
  6. காப்பரின் முக்கிய தாது எது?
    • விடை: காப்பர் பைரைட்.
  7. இரும்பின் முக்கிய தாது எது?
    • ஹேமடைட் (Fe2O3)
  8. இரும்பின் முக்கிய தாது எது?
    • விடை: ஹேமடைட் (Fe2O3)
  9. ஜிங்க் மற்றும் காப்பரை உருக்கிச் சேர்த்தல் மூலம் உலோகம் கிடைக்கும் எது?
    • விடை: பித்தளை
  10. துருவின் வேதிப்பொருள் எது?
    • விடை: நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ( Fe2O3 H2O)

2 Comments

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.