- ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ஐசோபார்.
- நடனமாடும் தாவரம் என அழைக்கப்படும் தாவரம் எது?
- விடை: டெஸ்மோடியம் கைரான்ஸ்
- பூச்சி உண்ணும் தவரங்கள் எவை?
- விடை: நெபந்தஸ், ட்ரோஸிரா, வீனஸ் பூச்சிப்பிடிப்பான்
- ஒளிசேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
- விடை: ஆக்ஸிஜன்
- கோபிபோடுகள் என்பவை எவை?
- விடை: சிறிய கிரஸ்டேஷியன்கள் (இறால் போன்றவை), கடலில் வாழ்பவை.
- நாம் அறிந்த உயிரினங்களில் ஒரு கண்ணை மட்டும் உடைய ஒரே உயிரினம் எது?
- விடை: கோபிபோடுகள்
- தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
- விடை: மரகத புறா
- விலங்குகளை இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- விடை: கரோலஸ் லின்னேயஸ்
- கொழுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: முக்கிளிசரைடுகள் அல்லது மூன்று கிளிசரைடுகள்
- புரதங்களின் அதிகப்படியான குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எவை?
- விடை: குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus)
good
உங்கள் கருத்துக்கு நன்றி.
– குருவிரொட்டி குழு