குருவிரொட்டி இணைய இதழ்

பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)

பொது அறிவியல் – General Science – பொது அறிவு – General Studies / General Knowledge – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (Questions and Answers for Objective Type Examinations)

தமிழ்நாடு தேர்வு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.ஸி – TNPSC) நடத்தும் பொது அறிவியல் – பொது அறிவு (General Science – General Studies) கொள்குறித் தேர்வுகளுக்குப் பயன்படக்கூடிய வினா-விடைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வினா விடைகள் இந்த வினாவிடைப் பட்டியலில் அவ்வப்போது சேர்க்கப்படும்.



  1. புதைபடிவங்கள் பற்றிய அறிவியல் பிரிவுக்குப் பெயரென்ன?
    • விடை: தொல்லுயிரியல்.
  2. தொல்லுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: லியோனார்டோ டாவின்சி.
  3. தொல் தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: கேஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க் (Kaspar Maria Von Sternberg).
  4. சிற்றினங்களின் தோற்றம் (Origin of Species) என்ற புத்தகத்தை  வெளியிட்டவர் யார்?
    • விடை: சார்லஸ் டார்வின் (Charles Darwin).
  5. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: பீர்பால் சஹானி (Birbal Sahani).
  6. பாறைகளில் புதை உயிர்ப் படிவங்கள் உருவாவவதற்கு என்ன பெயர்
    • விடை: படிவமாதல்.
  7. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: டாக்டர் மா.சா. சுவாமிநாதன் (Dr. M.S. Swaminathan).
  8. மரபொத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறைக்குப் பெயரென்ன?
    • விடை:   குளோனிங்.
  9. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் (Restriction Enzymes), டி.என்.ஏ (DNA) இழையின் குறிப்பிட்ட இடங்களில் துண்டிக்கின்றன. இதனால் இவை வேறு விதமாகவும் அழைக்கைப்படுகின்றன. இவற்றின் மற்றொரு பெயர் என்ன?
    • விடை: மூலக்கூறு கத்திரிக்கோல்.
  10. துண்டிக்கப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இ்ணக்கப்பயன்படும் நொதியின் பெயர் என்ன?
    • விடை: லைகோஸ் நொதி.
  1. சிறுநீரகத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன
    • விடை: அட்ரினல் சுரப்பி.
  2. நாளமில்லாச்சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?
    • விடை: தாமஸ் அடிசன்
  3. தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி ஏது?
    • விடை: பிட்யூட்டரி
  4. இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை செய்யும் ஹார்மோன் எது?
    • விடை: மெலட்டோனின்
  5. காலத் தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன் எவை?
    • விடை: மெலட்டோனின்.
  6. உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
    • விடை: தைராய்டு ஹார்மோன். 
  7. எந்த திரவத்தில் மூலை மிதந்த நிலையில் உள்ளது?
    • விடை: மூளைத் தண்டுவடத் திரவம்.
  8. மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்துவெளியேற்றும் பணியினை மேற்கொள்வது எது?
    • விடை: மூளைத் தண்டுவடத் திரவம். 
  9. நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியிலான அடிப்படை அலகு எது?
    • விடை: நியூரான்கள்.
  10. மனித மூளையின் 60% பகுதி எவற்றாலானது?
    • விடை: கொழுப்பாலானது.
  1. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் எது?
    • விடை: முகுளம்
  2. இரத்தம் எடுத்துச் செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருட்களையும் மற்றும் ஆக்சிஜனையும் வழங்குவது எது?
    • விடை: நிணநீர்
  3. இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ கருவி எது?
    • விடை: ஸ்பிக்மோமானோ மீட்டர்
  4. ஆரோக்கியமான மனிதன் ஓய்வாக உள்ள நிலையில் சிஸ்டோலிக் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் என்ன? 
    • விடை: 120 mmHg / 80 mmHg
  5. இதய சுழற்சி எத்தனை வினாடிகளில் முடிவடையும்? 
    • விடை: 0.8 வினாடி
  6. இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகளின்  வாழ்நாள் எவ்வளவு காலம்?
    • விடை:  8-10 நாட்கள்.
  7. இரத்தச் சிவப்பணுக்கள்  அல்லது எரித்ரோசைட்டுகளின்  வாழ்நாள் என்ன?
    • விடை: 120 நாட்கள்
  8. கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு என்ன? 
    • விடை: பெக்கொரல் 
  9. யுரேனியத்தை கண்டறிந்தவர் யார்? 
    • விடை: மார்ட்டின் கிலாபிராத்
  10. புவியின் நிறை, ஆரம், புவிஈர்ப்பு முடுக்கம் முதலியனவற்றை துல்லியமாக கணக்கிட உதவும்  விதி எது?
    • விடை: நியூட்டனின் ஈர்ப்பியல் விதி.
  1. ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் யாவை?
    •  விடை: நியூட்டனின் மூன்றாம் விதிமற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி
  2. மிகக் குறைந்த காலஅளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை எது?
    • விடை: கணத்தாக்கு(Impulse) விசை.
  3. பறவைகள் பறக்க பயன்படும் விதி எது?
    • விடை: நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?
      • விடை: 3 × 108 மீ/வி
  5. கண்ணுறு ஒளியில் அதிக அலை  நீளம் கொண்ட நிறம் எது?
    • விடை: சிவப்பு.
  6. மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க காரணம் எது?
    • விடை: மீ-சிதறல் 
  7. ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு எது?
    • விடை: டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு
  8. குவிலென்சு என்பது யாது?
    • விடை: குவிக்கும் லென்சு
  9. நுண்ணோக்கிகள் பயன்படும் லென்சு எது?
    • விடை: குவி்லென்சு.
  10. தூரப்பார்வை பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப்பயன்படும் லென்சு எது?
    • விடை: குவி்லென்சு. 
  1. குழிலென்சு என்பது யாது?
    • விடை: விரிக்கும் லென்சு
  2. வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்படுத்தப்படும் உளவுத்துளைகளில் பொருத்தப்படும் லென்சு எது?
    • விடை: குழிலென்சு.
  3. லென்சின் திறனின் SI அலகு எது? 
    • விடை: டையாப்டர்.
  4. மையோபியாவின் மற்றொரு பெயர் என்ன?
    • விடை: கிட்டப்பார்வை
  5. தூரப்பார்வை என்று அழைக்கப்படும் (ஹைப்பர் மெட்ரோபியா) குறைபாடு எதனால் ஏற்படுகிறது? 
    • விடை: விழிக்கோளம் சுருங்குவதால்.
  6. எந்த வகையான மின் இணைப்பில் ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுக்களின் வழியாக மின்னோட்டம் பாயும்?
    • விடை: பக்க இணைப்பு.
  7. ஒரு குதிரைத் திறனின் அளவு என்ன?
    • விடை: 746 வாட்.
  8. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் என்ன?
    • விடை: அதிகரிக்கிறது.
  9. எதிரொலிக் கேட்பதற்கான குறைந்த பட்சத் தொலைவு என்ன?
    • விடை: 17.2 மீ 
  10. ஒலியின் திசைவேகம் காற்றில் என்ன?
    • விடை: 344 மீ/வி
  1. முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
    • விடை: கதிரியக்க அயோடின்-131 (I131)
  2. தோல் புற்று நோயைக் குணப்படுத்தப்பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
    • விடை: கதிரியக்கக் கோபால்ட்-60 (Co60) மற்றும் தங்கம்-198 (Au198)
  3. பாதுகாப்பானகதிர்வீச்சின் அளவு ஒரு வாரத்திற்கு என்ன?
    • விடை: 100 மில்லி ராண்ட்ஜன்
  4. தொடர்வினையை நிலை நிறுத்தி நியூட்ரான்களின் எண்ணிக்கையைத் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கழி எது?
    • விடை: போரான் மற்றும் காட்மியம்
  5. ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
    • விடை: அணுக்கரு இணைவு
  6. காப்பரின் முக்கிய தாது எது?
    • விடை: காப்பர் பைரைட்.
  7. இரும்பின் முக்கிய தாது எது?
    • ஹேமடைட் (Fe2O3)
  8. இரும்பின் முக்கிய தாது எது?
    • விடை: ஹேமடைட் (Fe2O3)
  9. ஜிங்க் மற்றும் காப்பரை உருக்கிச் சேர்த்தல் மூலம் உலோகம் கிடைக்கும் எது?
    • விடை: பித்தளை
  10. துருவின் வேதிப்பொருள் எது?
    • விடை: நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ( Fe2O3 H2O)
  1. மனித ரத்தத்தின் pH மதிப்பு என்ன?
    • விடை: 7.35 லிருந்து 7.45
  2. செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவது எது?
    • விடை: மைட்டோகாண்ட்ரியா
  3. ஒளிச் செறிவிற்ககான அலகு எது?
    • விடை: கேண்டிலா (cd)
  4. துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தில் பயன்படும் விசை எது?
    • விடை: மையவிலக்கு விசை.
  5. ஒரு ஒளி ஆண்டு என்பது என்ன?
    • விடை: 9.46 ×1012 கி.மீ. (9.46 ×1015 மீ), ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவு.
  6. நமக்கு மிக அருகில் உள்ள -நட்சத்திரம் எது?
    • விடை: ஆல்ஃபா சென்டாரி
  7. வைரம் மின்னுவதற்கான காரணம் என்ன?
    • விடை: முழுஅக எதிரொளிப்பு
  8. அணுக்கரு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: ரூதர்ஃபோர்டு
  9. அணுவின் உள்ளிருக்கும் அணுஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: குவாண்டம் எண்கள்
  10. ஒரே அணு எண் மற்றும் வெவ்வேறு நிறை எண்களை க் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    • விடை: ஐசோடோப்
  1. ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: ஐசோபார்.
  2. நடனமாடும் தாவரம் என அழைக்கப்படும் தாவரம் எது?
    • விடை: டெஸ்மோடியம் கைரான்ஸ்
  3. பூச்சி உண்ணும் தவரங்கள் எவை?
    • விடை: நெபந்தஸ், ட்ரோஸிரா, வீனஸ் பூச்சிப்பிடிப்பான்
  4. ஒளிசேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது?
    • விடை: ஆக்ஸிஜன்
  5. கோபிபோடுகள் என்பவை எவை?
    • விடை: சிறிய கிரஸ்டேஷியன்கள் (இறால் போன்றவை), கடலில் வாழ்பவை.
  6. நாம் அறிந்த உயிரினங்களில் ஒரு கண்ணை மட்டும் உடைய ஒரே உயிரினம் எது?
    • விடை: கோபிபோடுகள்
  7. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
    • விடை: மரகத புறா
  8. விலங்குகளை இரு பெயர்களிடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
    • விடை: கரோலஸ் லின்னேயஸ்
  9. கொழுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: முக்கிளிசரைடுகள் அல்லது மூன்று கிளிசரைடுகள்
  10. புரதங்களின் அதிகப்படியான குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எவை?
    • விடை: குவாசியோர்கர் (Kwashiorkar) மற்றும் மராஸ்மஸ் (Marasmus)
  1. வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் எது?
    • விடை: வைட்டமினோ சிஸ்
  2. வைட்டமின் D (கால்சிஃபெரால்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
    • விடை: ரிக்கெட்ஸ்.
  3. வைட்டமின் B1 (தயமின்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
    • விடை: பெரி பெரி.
  4. வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் எது?
    • விடை: ஸ்கர்வி
  5. வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்குப் பயன்படுத்தபபடும்  வேதிப்பொருள் எது?
    • விடை: கால்சியம் கார்பைடு
  6. ஓமின் விதிப்படி, ஒரு மின்சுற்றில் இரு புள்ளிகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு அதன் வழியே பாயும் மின்னோட்டத்திற்கு எவ்வாறு இருக்கும்?
    • விடை: நேர்தகவில்.
  7. காந்த விசைக் கோடு்கள் காந்தத்தின் எந்த துருவத்தில் துவங்கும்?
    • விடை: வட திசை.
  8. வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது என்னவாகும்?
    • விடை: குறையும்.
  9. பாதரசகாற்றழுத்தமானியை உருவாக்கியவர் யார்?
    • விடை: டாரிசெல்லி
  10. நீரியல் அழுத்தி (Hydraulic press) எந்த அடிப்படை விதியின்படி செயல்படுகிறது?
    • விடை: பாஸ்கல் விதி
  1. திரவங்களின் கீழ்பகுதியில் உள்ள அழுத்தம் மேல்பகுதியில் உள்ளதைவிட, எவ்வாறு இருக்கும்?
    • விடை: அதிகமாக.
  2. மிதப்பு விசையானது பாய்மங்களின் எவை இரண்டையும் சார்ந்தது?
    • விடை: பருமன் மற்றும் அடர்த்தி.
  3. பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் கருவி எது?
    • விடை: பால்மானி (லேக்டோமீட்டர் – Lactometer).
  4. எதிரொலியைத் தெளிவாகக் கேட்கவேண்டுமானால், எதிரொலிக்கும் பரப்பு ஒலி மூலத்திலிருந்து குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொலைவு என்ன?
    • விடை: 17 மீ
  5. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
    • விடை: 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை.
  6. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
    • விடை: புதன்
  7. வெள்ளி கோளில் சூரியன் உதிக்கும் திசை எது?
    • விடை: மேற்கு
  8. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை என்ன?
    • விடை: 8
  9. சூரியன் ஒரு விண்மீனா?
    • விடை: ஆம். சூரியன் ஒரு விண்மீன்.
  10. சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களுக்கு என்ன பெயர்?
    • விடை: வால்விண்மீன்
  1. பொருள் அல்லது மனிதர்கள் எடையற்றுப் இருப்பதுபோல் தோன்றும் நிலைக்கு என்ன பெயர்?
    • விடை: நுண் ஈர்ப்பு
  2. SI எனப்படும் பன்னாட்டு அலகு முறையின் விரிவாக்கம் என்ன?
    • விடை: International System of Units 
  3. நீளம், நிறை மற்றும் காலத்தின் SI அலகுகள் என்ன?
    • விடை:  மீட்டர் (m), கிலோகிராம் (kg), வினாடி (s) (செகண்ட்) அதாவது mks
  4. ஒருபொருளின் தோற்றநிலையை இருவேறு பார்வைக்கோடுகளின் வழியே நோக்கும்போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை:  இடமாறு தோற்றப்பிழை (Parallax Error)

நினைவில் கொள்க!

நினைவில் கொள்க!

அளவீடுகள்

  • நீளம் / தூரம்:
    • 1 மீட்டர் (மீ) = 100 சென்டிமீட்டர் (செ.மீ) = 1000 மில்லி மீட்டர் (மி.மீ)
    • 1 சென்டிமீட்டர் (செ.மீ) = 10 மில்லி மீட்டர் (மி.மீ)
    • 1 கிலோமீட்டர் (கி.மீ) = 1000 மீட்டர் (மீ).
  • நிறை:
    • 1 கிலோகிராம் (கி.கி) = 1000 கிராம் (கி)
    • 1 கிராம் = 1000 மில்லி கிராம் (மி.கி)
  • காலம்:
    • 1 நிமிடம் = 60 வினாடி (செகன்ட்)
    • 1 மணி நேரம் = 60 நிமிடங்கள் = 3600 வினாடிகள்

  1. ஒழுங்கற்ற பொருள்களின் பருமனை அளந்தறியப் பயன்படும் முறை எது?
    • விடை: நீர் இடப்பெயர்ச்சி முறை
  2. ஒரு பொருள் அதன் அச்சினை மையமாக கொண்டு இயங்கினால், அவ்வியக்கம் எது?
    • விடை:  தற்சுழற்சி இயக்கம்
  3. தானாகக் கீழேவிழும் பொருளின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
    • விடை: நேர்க்கோட்டு இயக்கம்.
  4. பம்பரத்தின் இயக்கம் எவ்வகையான இயக்கம்?
    • விடை: தற்சுழற்சி இயக்கம்
  5. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு நிலைக்கு என்ன பெயர்?
    • விடை: பிளாஸ்மா நிலை
  6. மிகக்குறைவான் தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை என்ன?
    • விடை: போஸ் நிலை
  1. நைட்ரஜனை  கண்டறிந்தவர் யார்?
    • விடை: டேனியல் ரூதர்போர்டு. 
  2. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளால் ஆனது?
    • விடை: 5 (ஐந்து) 
  3. நமக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கின் பெயர் என்ன?
    • விடை: அடி வளிமண்டலம்(Troposphere).
  4. புவியில்  முதன்முதலில் உருவானசெல் எது?
    • விடை: புரோகேரியாடிக்
  5. தெளிவான உட்கருவை கொண்டுள்ள செல் எது?
    • விடை: யூகேரியாடிக் 
  6. மனி்தனின்  உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன?
    • விடை: 206
  7. நமது  உடலில் எங்கு மிகச்சிறிய எலும்பு காணப்படுகிறது?
    • விடை: உள் காதில் (அங்கவடி – Stapes).
  8. நமது உடலில் நீளமான எலும்பு எங்கு காணப்படுகிறது?
    • விடை: தொடை எலும்பு. 
  9. மென்தசைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    • விடை: கட்டுப்படாத இயங்கு   தசைகள்.
  10. சுவாசபாதைக்குள் உணவு செல்வதை தடுக்கும் அமைப்பு எது?
    • விடை: குரல்  வளைமூடி  (எப்பிகி்ளாட்டிஸ்) .
  1. நுரையீரல்களை சுற்றி இரு அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன?
    • விடை: ப்ளூரா (Pleura)
  2. இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?
    • விடை: எலும்பு மஜ்ஜை
  3. சீறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு எது?
    • விடை: நெஃப்ரான்கள்
  4. இரத்தத்தினை வடிகட்டி சீறுநீ்ரை உருவாக்குவது  எது?
    • விடை: நெஃப்ரான்கள்
  5. காந்தத் தன்மையுள்ள பொருட்கள் எவை?
    • விடை: இரும்பு, கோபால்ட், நிக்கல்
  6. புவியில் காணப்படும் நன்னீரின் அளவு என்ன?
    • விடை: 3% (மூன்று சதவீதம்)
  7. நன்னீரில் குறைந்தபட்சம் மற்றும்  அதிகபட்சமாக கரைந்திருக்கும் உப்புகளின் அளவு என்ன?
    • விடை: 0.05% தொடங்கி 1% 
  8. நீர் சுழற்சியினை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
    • விடை: ஹைட்ராலஜிக்கல் சுழற்சி (Hydrological Cycle).
  9. தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும், முதன்மை ஊட்டச்சத்துக்கள் எவை?
    • விடை: நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) 
  10. ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
    • விடை: கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் (CaSO4.2H2O)
  1. எப்சத்தின் வேதிப்பெயர் என்ன?
    • விடை: மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் (MgSO4 . 7H2O)
  2. மனிதத் தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்கப் பயன்படும் வேதிப்பொருள் எது?
    • விடை: எப்சம்
  3. அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்ய பயன்படும் வேதிப்பொருள் எது?
    • விடை: பாரிஸ் சாந்து (கால்சியம் சல்பேட் ஹெமி  ஹைட்ரேட்  – CaSO4 . ½H2O)
  4. ஃபீனைல் என்பது என்ன?
    • விடை: கார்பாலிக் அமிலம்( C6H5OH)
  5. தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் சோடியம் ஹைடிராக்சைடு கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது  கிடைப்பது?
    • விடை: சோப்பு.
  6. பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகியவை சுற்றுச்சூழலைக் காக்கும் முக்கிய மூன்று வழிமுறைகள்  இவற்றை நாம் எவ்வாறு அழைக்கிறோம். 
    • விடை: 3R
  7. அணுவின் சராசரி விட்டம் என்ன?
    • விடை: 1×10-10 மீட்டர் அதாவது, 0.1×10-9 மீட்டர். அதாவது, 0.1 நேனோமீட்டர்
  8. ஒரு அணுவின் நிறையானதுஅணுக்கருவினுள் அமைந்துள்ள எவை இரண்டையும் சார்ந்திருக்கும்?
    • விடை: புரோட்டான்கள் (Protons) மற்றும் நியூட்ரான்கள் (Neutrons)
  9. அணுக்கருவினுள் காணப்படும் துகள்கள் அழைக்கப்படுகின்றன?
    • விடை: நியூக்ளியான்கள் (Nucleons)
  10. புரோட்டான்களை கண்டறிந்தவர் யார்?
    • விடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு (Ernest Rutherford)
  1. எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
    • விடை: சர் ஜான் ஜோசப் தாம்சன் 
  2. நியூட்ரான் கண்டறிந்தவர்
    • விடை: ஜேம்ஸ் சாட்விக் 
  3. சீத்தாப்பழம் என்பது என்ன?
    • விடை: பல கனி்கள் சேர்ந்து உருவான திரள்கனி
  4. கரும்பு மற்றும் மக்காச் சோளத்தின் கணுக்களில் காணப்படும் கொத்தான வேர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
    • விடை: முட்டு வேர்கள்
  5. சதுப்பு நிலத்தில் வாழும் அவிசீனியா மரத்தின் வேர்கள் மேலே வளர்வதற்கு என்ன பெயர்?
    • விடை: சுவாசிக்கும் வேர்கள் அல்லது நிமட்டடோ ஃபோர்கள்
  6. ஒட்டுண்ணித்தாவரத்திர்க்கு ஓர் எடுத்துக்காட்டு என்ன?
    • விடை: கஸ்குட்டா.
  7. உணவு அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல் (Mastication)
  8. காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது?
    • விடை: மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே
  9. DOT-ன் விரிவாக்கம் என்ன?
    • விடை: Directly Observed Treatment
  10. காலராவை நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?
    • விடை: விப்ரியோ காலரே
  11. டைபாய்டு நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா எது?
    • விடை: சால்மோனெல்லா டைபி
  1. மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
    • விடை: அம்மீட்டர்
  2. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி எது?
    • விடை: வோல்ட்மீட்டர்
  3. துணை மின்கலன்களில்  உருவாகும் வேதிவினையானது எவ்வகை வினை? 
    • விடை: மீள்வினை
  4. சிம் கார்டுகள், கணினிகள், மற்றும் ATM கார்டுகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளில்   பயன்படும் குறைக்கடத்திகள் எவை?
    • விடை: சிலிகான் மற்றும் ஜெர்மேனியம்
  5. ஆவியாதல்  திரவத்தின்   எப்பகுதில்  மட்டும் நிகழ்வதாகும்?
    • விடை: புறப்பரப்பில்
  6. திண்ம நிலையில் இருந்து வாயு நிலைக்கு பொருள்கள் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?
    • விடை: பதங்கமாதல்
  7. ஆவியாதல், கொதித்தல், ஆவி சுருங்குதல், உருகுதல் மற்றும் உறைதல் ஆகிய நிகழ்வுகள் எவ்வகையான நிகழ்வுகள்?
    • விடை: இயற்பியல்
  8. பிரித்தெடுக்கும், தூய்மையாக்கும் முறை என்பது என்ன?
    • விடை: படிகமாக்குதல்
  9. ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சர்க்கரைக் கரைசல் ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறும் நிகழ்வுக்குப் பெயரென்ன?
    • விடை: நொதித்தல்
  10.  தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு உருவாகுவது எது?
    • விடை: வனஸ்பதி  
  1. சமையலில் பயன்படும் வனஸ்பதியை உருவாக்கப் பயன்படும் வினையூக்கி எது?
    • விடை: நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம்
  2. தட்டம்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை: வாரிசெல்லா
  3. அமீபா எதன் மூலம்  மூலம் இடம் பெயர்கிறது?
    • விடை: போலிக் கால்கள்
  4. உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும்  பாக்டீரியாக்கள் எவை?
    • விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக்
  5. பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயர் என்ன?
    • விடை: ரைசோபியம்
  6. காற்றில்லாநிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு  பயன்படுத்தப்படும்  பாக்டீரியாவின் பெயர் என்ன?
    • விடை: மெத்தனோ பாக்டீரியா 
  7. வினையூக்கி என்பது என்ன?
    • விடை: எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்.
  8. உணவு கெட்டுப்போதல் என்பது எவ்வகையான மாற்றம்?
    • வேதியியல் மாற்றம்
  9. ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்காக உருவான செல்களின் குழுவுக்குப் பெயரென்ன?
    • விடை: திசு
  10. உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு என்ன?
    • விடை: செல் 
  1. தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருவது எது?
    • விடை: செல்லுலோஸ்
  2. விலங்கு செல்களில், செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுவது எது?
    • விடை: சென்ட்ரியோல் (Centrioles)
  3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
    • விடை: உட்கரு
  4. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
    • விடை: R.H விட்டேக்கர் 
  5. வேப்ப மரத்தின் இருசொற் பெயர் என்ன?
    • விடை: அசாடிரேக்டா இண்டிகா  
  6. ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்டுகிறது?
    • விடை: ஒளிச்செறிவு  
  7. ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
    • விடை: கேண்டிலா
  8. ஒளியின் திறனுக்கான SI அலகு என்ன?
    • விடை: லுமென் (lumen) 
  9. திண்மக் கோணத்தின் SI அலகு என்ன?
    • விடை: ஸ்ட்ரேடியன்
  10. எதனை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள செயல்படுகின்றன?
    • விடை: அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை.
  1. குவார்ட்ஸ் கடிகாரங்கள் எந்த  அலைவுகள்   மூலம் இயங்குகின்றன?
    • விடை: மின்னணு அலைவுகள் (Electronic Oscillations)
  2. எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை எது?
    • விடை: உந்து விசை
  3.   திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும் கருவி எது?
    • விடை: மானோமீட்டர்
  4. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணமான விசை?
    • விடை:  பரப்பு இழுவிசை
  5. தாவர வேர்கள் நீர் மூலக்கூறுகளை உறிஞ்சுகிறது. எதன் மூலம் “நுண்புழை ஏற்றம்” என்ற செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது?
    • விடை: சைலம் என்ற மெல்லிய குழாய்   
  6. திரவத்துளிகள் எவ்வாறு கோள வடிவத்தை பெறுகின்றன?
    • விடை:  ஒரு குறிப்பிட்ட பருமனிற்கு மிகச்சிறிய புறப்பரப்பு தரும் வடிவம் கோள வடிவம் ஆகும்.
  7. நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக நடக்கக் காரமான விசை எது?
    • விடை:  நீரின் பரப்பு இழுவிசை 
  8. டார்ச் விளக்குகளில் பயன்படும்  ஆடிகள் எவை?
    • விடை:  குழிஆடிகள் 
  9. சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் பயன்படும் ஆடிகள் எவை?
    • விடை:  குவி ஆடிகள்
  10. உடல் உள்உறுப்புக்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் கருவி எது? 
    • விடை:  ஒளியிழை பெரிஸ்கோப் 
  1. தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 
    •  
      விடை:  கரிமச் சேர்மங்கள்
  2. வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் வினைவேக மாற்றியாக பயன்படுவது எது?
    • விடை:  நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் 
  3. என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 
    • விடை:  உயிரி வினைவேக மாற்றிகள்
  4. ஒரு உணவில் துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்ற நிகழ்வுகளால் உணவின் தரம் குறைய காரணமாக அமையும் உயிரி வினைவேகமாற்றி எது? 
    • விடை:  என்சைம்
  5. முட்டைகள் அழுகும்பொழுது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?
    • விடை:  ஹைட்ரஜன் சல்பைடு 
  6. செல்கள் பாலிஃபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைமைக் கொண்டுள்ளன. இவை ஆக்சிஜனுடன் தொடர்புக்கு வரும்பொழுது பழங்களிலுள்ள ஃபீனாலிக் சேர்மங்களை பழுப்பு நிறமிகளாக மாறச் செய்கின்றன. இப்பழுப்பு நிறமிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 
    • விடை:  மெலனின்
  7. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி எது?
    • விடை:  மெலனின்
  8. வைரஸ் என்பது எவற்றால் ஆனது?
    • விடை:  மரபுப் பொருள் மற்றும் புரதத்தால்
  9. வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை?
    • விடை:  10,000   
  10. பாக்டீரியாவில் இருவகை எவை? 
    • விடை:  (1) காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது).   (2) காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)
  1. எந்த வகை பாக்டீரியாக்கள் தமது உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன?
    • விடை: ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்கள்
  2. ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு?
    • விடை: சயனோபாக்டீரியா
  3. பல செல்களால் ஆன பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: பெனிசிலியம்
  4. பூஞ்சைகளைப் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்?
    • விடை: மைக்காலஜி
  5. ஒரு செல்லாலான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: ஈஸ்ட்
  6. ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் நொதிக்குப் பெயரென்ன? 
    • விடை: சைமேஸ் 
  7. ஒரு செல்லாலான, நகரும் திறனுடைய நன்னீர் வாழ் பாசிக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: கிளாமிடோமோனாஸ். 
  8. அமீபா எதன் மூலம்  மூலம் இடம் பெயர்கிறது?
    • விடை: போலிக் கால்கள்
  9. உயிரியல் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா எவை?
    • விடை: சயனோ பாக்டீரியா, நாஸ்டாக் போன்றவை 
  10. பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாவின் பெயரென்ன? 
    • விடை: ரைசோபியம் 
  1. காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு  பயன்படுத்தப்படும்  பாக்டீரியா எது?
    • விடை: மெத்தனோ பாக்டீரியா
  2. மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்கழிவுகள், தாவரங்களின் கழிவுகள், காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும் போது மீத்தேனுடன் (உயிரி வாயு) சேர்ந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனும் உற்பத்தியாகின்றன. இந்த பாக்டீரியங்கள் எவ்வாறு என்றழைக்கப்படுகின்றன?
    • விடை: மெத்தனோஜென்கள்
  3. லினென் நூலிழைகள் தயாரிக்கப்படுதலில் பயன்படும் நுண்ணுயிரி எது?
    • விடை: சூடோமோனாஸ் ஏருஜினோஸா
  4. பாலில் உள்ள லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியா  எது?
    • விடை: லேக்டோ பேசில்லஸ்
  5. பாலைத் தயிராக்க உதவும் பாக்டீரியா எது?
    • விடை: லேக்டோ பேசில்லஸ்
  6. லாக்டிக் அமில பாக்டீரியா என்றழைக்கப்படும் பாக்டீரியா  எது?
    • விடை: லேக்டோ பேசில்லஸ்
  7. வைரஸினால் உண்டாகும் ஃப்ளூ காய்ச்சல் எதன்  மூலம் பரவுகிறது?
    • விடை: காற்றின் மூலம்
  8. விலங்குகளின்  வாய் மற்றும் கால்க் குளம்புளில்   நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
    • விடை: ஆப்ரோ வைரஸ்
  9. தாவர நோயான சிட்ரஸ் கேன்சர் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
    • விடை: சாந்தோமோனஸ்ஆக்ஸனோபோடிஸ் (பாக்டீரியா)
  10. உருளைக்கிழங்கு பிளைட் நோயுண்டாக்கும் நுண்ணுயிரி எது?
    • விடை: பைட்டோபைத்தோரா இன்ஃபெஸ்டென்ட்ஸ் (பூஞ்சை )
 
  1. மாமரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
    • விடை: மாஞ்சிஃபெரா இன்டிகா
  2. இந்தியாவில் மிகப்பெரிய உலர்தாவரத்தொகுப்பு (Herbarium) எங்கு உள்ளது? 
    • விடை: கல்கத்தா
  3. ஒரு செல் உயிரியில் நகர்ந்து செல்லக்கூடிய பாசி எது?
    • விடை: கிளாமைடோமோனஸ்
  4. குழுவாகச் சேர்ந்து வாழும் தன்மை கொண்ட பாசிகள் எவை?
    • விடை: வால்வாக்ஸ்
  5. வீட்டு விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும் பாசிக்கு எடுத்துக்காட்டு?
    • விடை: லேமினேரியா, அஸ்கோஃபில்லம்
  6. மக்கள் உணவாக உட்கொள்ளும் பாசிகள் எவை?
    • விடை: அல்வா, ஸ்பைருலினா, குளோரெல்லா
  7. மண்ணின் வளத்தை அதிகரிக்க பயன்படும் பாசிகள் எவை?
    • விடை: நாஸ்டாக், அனபீனா
  8. விண்வெளிப் பயணத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அகற்றுவதற்கும் மனிதக் கழிவுகளை மட்கச் செய்வதற்கும் பயன்படும் பாசிகள் எவை?
    • விடை: குளோரெல்லா ஃபைரினாய்டோசா
  9. புரதத்தை உற்பத்தி செய்யும் பாசிகள் எவை?
    • விடை: குளோரெல்லா, ஸ்பைருலினா
  10. வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உருவாக்கும் ஒட்டுண்ணிகள் (பூஞ்சைகள்) எவை?
    • விடை: செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா.
  1. பூஞ்சைகள் எந்த பிரிவை சார்ந்தவை?
    • விடை: தாலோஃபைட்டா
  2. மட்குண்ணிகள் எந்த பொருள்களிலிருந்து உணவை பெறுகின்றன?
    • விடை: இறந்த மற்றும் அழுகிய
  3. உண்ணக்கூடிய காளான் எந்த வகையைச் சார்ந்தது?
    • விடை: அகாரிகஸ் (பொத்தான் காளான்)
  4. கரும்பில் சிவப்பு அழுகல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
    • விடை: கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம்
  5. பருத்தியில் வாடல் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
    • விடை: ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம்
  6. நெல்லில் பிளாஸ்ட் நோயை எற்படுத்தும் பூஞ்சை எது?
    • விடை: பைரிகுலேரியா ஒரைசே
  7. குழந்தைகளிடம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
    • விடை: அஸ்பர்ஜில்லஸ்
  8. குழந்தைகளை ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பூஞ்சை எது?
    • விடை: கிளாடோஸ்போரியம்
  9. மனிதனின் தலையில் பொடுகு எற்படுத்தும் பூஞ்சை எது?
    • விடை: மைக்கோஸ்போரம் ஃபர்ஃபர்
  10. பாசிகள் சேகரிக்கும் உணவு எது?
    • விடை: ஸ்டார்ச் 
  1. பூஞ்சைகள் சேகரிக்கும் உணவு எது?
    • விடை: கிளைக்கோஜன், எண்ணெய்
  2. வயிற்றிலுள்ள உருளைப் புழுக்களை அழிக்கும் தாவரம் எது?
    • விடை: அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)
  3. தீராத வயிற்றுப் போக்கு, சீதபேதிஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் எது?
    • விடை: ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)
  4. எந்த தாவரத்தின் இலைகளும் கனிகளும் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன?
    • விடை: சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)
  5. மஞ்சள் காமாலை நோய்க்குமருந்தாகப் பயன்படும் தாவரம் எது?
    • விடை: ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)
  6. கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுப்படுத்துவது எது?
    • விடை: ஐரிஸ் (கருவிழி) (Iris)
  7. ஒளியை கண்ணின் உள்ளே அனுப்புவது எது?
    • விடை: கண்பாவை (Pupil)
  8. ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி அவற்றை பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு அனுப்பும் பணியைச் செய்வது எது?
    • விடை: விழித்திரை (Retina)
  9. கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கும் திரவம் எது?
    • விடை: விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)
  10. ஓய்வில் உள்ள ஒரு பொருளை இயக்கத்திற்கு மாற்ற உதவுவது எது?
    • விடை: விசை
  1. இயக்கத்தில் உள்ள ஒரு பொருள் ஓய்வுநிலைக்கு வருவதற்கு காரணம் என்ன?
    • விடை: விசை
  2. இயங்கும் பொருளை வேகமாக இயக்குவதற்கும், வேகத்தைக் குறைக்கவும் எது தேவைப்படுகிறது?
    • விடை: விசை
  3. நகரும் பொருளின் திசையை மாற்ற உதவுவது எது?
    • விடை: விசை
  4. பொதுவாக விசை என்பது எப்படி பொருள் கொள்ளப்படுகிறது?
    • விடை: தள்ளுதல் அல்லது இழுத்தல்
  5. விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி பயிலும் அறிவியல் பாடத்திற்கு என்ன பெயர்?
    • விடை: இயந்திரவியல் (Mechanics)
  6. இயந்திரவியலின் இரண்டு பிரிவுகள் எவை?
    • விடை: நிலையியல் (Statics) மற்றும் இயங்கியல் (Dynamics)
  7. விசையின் செயல்பாட்டால் ஓய்வு நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?
    • விடை: நிலையியல் (Statics)
  8. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருளின் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவியலுக்கு என்ன பெயர்?
    • விடை: இயங்கியல் (Dynamics)
  9. இயங்கியலின் (Dynamics) இரு பிரிவுகள் யாவை?
    • விடை: இயக்கவியல் (Kinematics) மற்றும் இயக்கவிசையியல் (Kinetics)
  10. இயக்கத்தை ஏற்படுத்தும் விசையினைக் கருத்தில் கொள்ளாமல் இயக்கத்தினை மட்டுமே விளக்கும் அறிவியல் எது?
    • விடை: இயக்கவியல் (Kinematics)
  1. பொருளின் இயக்கத்தையும் அதற்குக் காரணமான விசை பற்றியும் விளக்கும் அறிவியலுக்குப் பெயரென்ன?
    • விடை: இயக்கவிசையியல் (Kinetics)
  2. விசை சார்பற்ற இயக்கத்தை (இயற்கையான இயக்கம்) வரையறுத்தவர் யார்?
    • விடை: அரிஸ்டாட்டில்
  3. ஒரு பொருள், தன் மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தனது ஓய்வு நிலை, அல்லது தான் சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையில் மாற்றம் ஏற்படுவதை எதிர்க்கும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    • விடை:  நிலைமம்
  4. நிலைமத்தின் வகைகள் யாவை?
    • விடை:  ஓய்வில் நிலைமம், இயக்கத்தில் நிலைமம் மற்றும் திசையில் நிலைமம்
  5. நீளம் தாண்டுதலில், போட்டியாளர் நீண்ட தூரம் தாண்டுவதற்காக, தான் தாண்டும் முன், சிறிது தூரம் ஓடுவதற்குக் காரணம் என்ன?
    • விடை:  இயக்கத்திற்கான நிலைமம்
  6. ஓடும் மகிழுந்து வளைபாதையில் செல்லும் போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் என்ன?
    • விடை:  திசைக்கான நிலைமம்
  7. கிளைகளை உலுக்கிய பின் மரத்திலிருந்து கீழே விழும் இலைகள், பழுத்தபின் விழும் பழங்கள் இவை யாவும் எவற்றிற்கான எடுத்துகாட்டு?
    • விடை: ஓய்விற்கான நிலைமம்
  8. ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை எதன் மூலம் அளவிடலாம்?
    • விடை: நேர்க்கோட்டு உந்தத்தின் மூலம் (Linear Momentum)
  9. இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் எவ்வாறு அழைக்கப்படும்?
    • விடை: உந்தம்
  10. உந்தத்தின் திசை எவ்வாறு இருக்கும்?
    • விடை: திசைவேகத்தின் திசையிலேயே
  1. உந்தம் என்பது எவ்வகையான அளவு?
    • விடை: வெக்டார்
  2. விசையின் எண் மதிப்பானது எதனால் அளவிடப்படுகிறது?
    • விடை: உந்தத்தால்
  3. உந்தத்தின் SI அலகு என்ன?
    • விடை: கிகி மீவி-1 (அதாவது, கிகி.மீ /வி)
  4. திசைவேகமோ, நிறையோ அதிகமானால் விசையின் தாக்கம் எப்படி இருக்கும்?
    • விடை: அதிகமாகும்.
  5. உந்தத்திற்கான சமன்பாடு என்ன?
    • விடை: உந்தம் (p) = நிறை (m) × திசைவேகம் (v). அதாவது, p = mv
  6. ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும். இந்த விதியின் பெயரென்ன?
    • விடை: நியூட்டனின் முதல் விதி
  7. நியூட்டனின் முதல் விதி எவற்றை விளக்குகிறது?
    • விடை: விசையையும், பொருட்களின் நிலைமத்தையும்
  8. விசை எவ்வகையான அளவு?
    • விடை: எண்மதிப்பும் திசையும் கொண்ட வெக்டார் அளவு
  9. விசைகளின்யின் இரு வகைகள் யாவை?
    • விடை: ஒத்த இணைவிசைகள், மாறுபட்ட இணைவிசைகள்
  10. சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது ஒரே திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?
    • விடை: ஒத்த இணைவிசைகள்
  1. சமமான அல்லது சமமற்ற விசைகள், ஒரு பொருள்மீது எதிரெதிர் திசையில் இணையாகச் செயல்பட்டால், அவற்றிற்கு என்ன பெயர்?
    • விடை: மாறுபட்ட இணைவிசைகள்
  2. ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசைக்கு என்ன பெயர்?
    • விடை: தொகுபயன் விசை (Resultant Force)
  3. தொகுபயன் விசையின் மதிப்பு, செயல்படும் அனைத்து விசைகளின் வெக்டர் கூடுதலுக்கு எவ்வாறு இருக்கும்?
    • விடை: சமமாக இருக்கும்
  4. ஒரு பொருளின் மீது செயல்படும் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியாக இருந்தால், அதிலிருந்து நாம் என்ன அறியலாம்?
    • விடை: பொருள் சமநிலையில் உள்ளதென்று அறியலாம்
  5. தொகுபயன் விசையின் மதிப்பு சுழி எனில் அவ்விசைகளுக்கு என்ன பெயர்?
    • விடை: சமன் செய்யப்பட்ட விசைகள் (Balanced Forces)
  6. ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், என்னவாகும்?
    • விடை:  அவை பொருளின் இயக்கத்திற்குக் காரணமாக இருக்கும்.
  7. ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகளின் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியில்லையெனில், அவ்விசைகளுக்கு என்ன பெயர்?
    • விடை: சமன் செய்யப்படாத விசைகள்
  8. கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, எதற்கான எடுத்துக்காட்டு?
    • விடை: சமன் செய்யப்படாத விசைகள்
  9. சமன் செய்யப்படாத விசைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் என்ன?
    • விடை: கிணற்றில் இருந்து நீர் எடுக்கச் செயல்படும் விசை, நெம்புகோலின் மீது செயல்படும் விசை, தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை
  10. பொருட்களை சமநிலைக்கு கொண்டுவர உதவும், தொகுபயன் விசைக்குச் சமமான, ஆனால், எதிர்த்திசையில் செயல்படும் விசைக்கு என்ன பெயர்?
    • விடை: எதிர்சமனி (Equilibrant)
  1. ஒளி (Light) என்பது என்ன?
    • விடை: ஒரு வகையான ஆற்றல்
  2. ஒளி எப்போதும் எவ்வாறு செல்கிறது?
    • விடை: நேர்க்கோட்டில்
  3. ஒளி எந்த வடிவில் பரவுகிறது?
    • விடை: அலைவடிவில்
  4. ஒளி செல்லும் பாதைக்கு என்ன பெயர்?
    • விடை: ஒளிக்கதிர் (Light Ray)
  5. ஒளிக்கதிர்களின் தொகுப்புக்கு என்ன பெயர்?
    • விடை: ஒளிக்கற்றை (Light Beam)
  6. ஒளியை வெளிவிடும் பொருட்களுக்கு என்ன பெயர்?
    • விடை: ஒளிமூலங்கள் (Light Sources)
  7. தங்களின் சுய ஒளியை வெளியிடும் பொருட்களுக்கு என்ன பெயர்?
    • ஒளிரும் பொருட்கள் (Luminous Objects) 
  8. ஒளிரும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள் என்ன?
    • விடை: சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும்.
  9. ஒளி பரவுவதற்கு எது தேவையில்லை?
    • விடை: ஊடகம்
  10. ஒளியின் திசைவேகம் (C), அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (ν) ஆகிவற்றுக்கான, சமன்பாடு என்ன?
    • விடை: C = ν λ

(தொடரும்…