டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4- தேர்வு-க்குப் படிக்கத் தேவையான சில புத்தகங்கள் – List of TNPSC Group-IV Exam Study Materials – Year 2019
2019-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-IV தேர்வு, அதாவது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 4-க்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்களா? ஒருங்கிணைந்த தொகுதி-4 தேர்வுக்குப் படிக்கத் தேவையான சில புத்தகங்களின் பட்டியலைக் காண்போம் (List of TNPSC Group-IV Study Materials)!
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-4 தேர்வுக்கான பாடத்திட்டத்தை தேர்வாணையத்தின் கீழ்க்கண்ட இணைய முகவரியில் காணலாம்:
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-4 தேர்வின் அறிக்கை மற்றும் விளக்கக் கையேடு
தொகுதி-4 கொள்குறிவகைத் (Objective Type) தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய விவரங்கள் மேற்கண்ட கையேட்டின் 10-வது பக்கத்திலும் மற்றும் பிற்சேர்க்கை-II-லும் (Appendix-II) கொடுக்கப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-4-க்கு பொதுவாக கீழ்க்கண்ட புத்தகங்கள் உதவியாக இருக்கும்:
- தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ், தமிழ் இலக்கணம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய பாடப் புத்தகங்கள் (தற்போது வழக்கத்தில் உள்ள புதிய பதிப்புகள்). இந்தப் புத்தகங்களில் தொகுதி-4 தேர்வின் பாடத்திட்டதிற்குத் தொடர்பான பகுதிகளை நன்றாகப் படிக்கவும்.
- கீழ்க்கண்ட இணைய முகவரியில் உள்ள அரசு வெளியிட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி. வினா-விடை கையேடு . இந்த இணைய முகவரியைக் க்ளிக் செய்து / தொட்டு, வினா-விடைக் கையேட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
- முந்தைய ஆண்டுகளுக்கான தொகுதி-4 தேர்வுகளின் வினாத்தாள்கள்; முந்தைய வினாத்தாள்களை விடைகளுடன் டி.என்.பி.எஸ்.சி-யின் கீழ்க்கண்ட இணைய முகவரியில் காணலாம்:
டி.என்.பி.எஸ்.சி முந்தைய வினாத்தாள்கள் – விடைகளுடன் . இந்த இணைய முகவரியைக் க்ளிக் செய்து / தொட்டு, வினாத்தாள்களை (விடைகளுடன்) பதிவிறக்கம் செய்யலாம். - பொது அறிவியல் – பொது அறிவு – கொள்குறித் தேர்வுக்கான வினா விடைகள் (General Science – General Studies / General Knowledge – Questions and Answers for Objective Type Exams)
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி – 4 -க்கான சக்தி கையேடு (புதிய பதிப்பு)
- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி – 4 -க்கான சுராவின் கையேடு (புதிய பதிப்பு)
- ஆர்.எஸ் அகர்வாலின் Quantitative Aptitude & Reasoning (புதிய பதிப்பு)
- தற்போதைய நிகழ்வுகள் – தினம்தோறும் செய்தித் தாள்களில் வெளிவரும் செய்திகள் (பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு தொடர்பான செய்திகளைக் கவனமாகப் படிக்கவும்.)
மேலே குறிப்பிட்ட டி.என்.பி.எஸ்.சி-யின் பயனுள்ள இணைய முகவரிகள்
புத்தகங்களை / கையேடுகளைப் பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள இணைப்புகளை க்ளிக் செய்யவும் / தொடவும்:
- தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப் புத்தகங்கள் – 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ், தமிழ் இலக்கணம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் (https://textbookcorp.tn.gov.in/textbook1.php)
- டி.என்.பி.எஸ்.சி. வினா-விடை கையேடு (https://tnvelaivaaippu.gov.in/pdf/TNPSC%20GUIDE.pdf)
- டி.என்.பி.எஸ்.சி முந்தைய வினாத்தாள்கள் – விடைகளுடன் (http://www.tnpsc.gov.in/answerkeys.html)
- டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-4 தேர்வின் அறிக்கை மற்றும் விளக்கக் கையேடு (http://www.tnpsc.gov.in/2019_19_ccse4-notfn-tamil.pdf)
Be the first to comment