சென்னையில் உள்ள, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மகளிர்க் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப் பட்ட தன்னாட்சி மகளிர்க் கல்லூரிகள் பற்றிப் பார்ப்போம் (Arts and Science Colleges in Chennai for Women). பெரும்பாலான கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிற்கான இளநிலை (UG) மற்றும் முதுநிலைப் (PG) பட்டப் படிப்பிற்கான சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக, சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளைநிலை மற்றும் முதுநிலை (கலை / Arts, அறிவியல் / Science, வணிகம் / Commerce, கணிப்பொறிப் பயன்பாடுகள் / Computer Applications – பி.ஏ, பி.எஸ்ஸி, பி.காம், பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்ஸி, எம்.சி.ஏ) போன்ற படிப்புகளின் பட்டியல் மற்றும் கல்வித் தகுதி பற்றி அறிய கீழே உள்ள இணைய முகவரியைப் பார்க்கவும்:
பொதுவாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பாடப் பிரிவுகளும் அதற்கான கல்வித் தகுதிகளும் Courses offered in General (with Eligibility)
சென்னையில் உள்ள பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள கல்லூரிகளில் உள்ள கலை மற்றும் அறிவியல் (இளநிலை மற்றும் முதுநிலை) பாடப் பிரிவுகளை அறிய, கல்லூரிகளின் பெயரைத் தொடவும் / க்ளிக் செய்யவும். சில கல்லூரிகளில் எம்.ஃபில்(M.Phil), பி.எச்.டி (Ph.D) போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.
- ஸ்டெல்லா மேரி மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) – Stella Maris College for Women (Autonomous), Chennai
- மகளிர்க் கிரிஸ்துவக் கல்லூரி (தன்னாட்சி) – Women’s Christian College (Autonomous), Chennai
- எம்.ஓ.பி வைஷ்னவ் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) – M.O.P. Vaishnav College for Women (Autonomous), Chennai
- எத்திராஜ் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) – Ethiraj College for Women (Autonomous), Chennai
- மீனாட்சி மகளிர்க் கல்லூரி – Meenakshi College for Women
- ராணி மேரி மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) – Queen Mary’s College (Autonomous), Chennai
- அண்ணா ஆதர்ஷ் மகளிர்க் கல்லூரி – Anna Adarsh College for Women, Chennai
- டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – Dr. M.G.R. Janaki College of Arts and Science for Women, Chennai
- காயிதே மில்லத் அரசு மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – Quaid-e-Millath Government Arts College for Women (Autonomous), Chennai
- பக்தவத்சலம் நினைவு மகளிர்க் கல்லூரி – Bhaktavatsalam Memorial College for Women
- வள்ளியம்மாள் மகளிர்க் கல்லூரி – Valliammal College for Women, Chennai
- பாரதி மகளிர்க் கல்லூரி – Bharathi’s Women’s College (Autonomous), Chennai
- பச்சையப்பன் அறக்கட்டளை – செல்லம்மாள் மகளிர்க் கல்லூரி – Chellammal Women’s College of the Pachaiyappa’s Trust, Chennai
- நீதியரசர் பஷீர் அஹ்மத் மகளிர்க் கல்லூரி – Justice Basheer Ahmed Syed College for Women, Chennai
- எஸ்.டி.என் பட் வைஷ்னவ் மகளிர்க் கல்லூரி – S.D.N. Bhatt Vaishnav College for Women, Chennai
- செவாலியே டி. தாமஸ் எலிசபத் மகளிர்க் கல்லூரி – Chevalier T. Thomas Elizabeth College for Women, Chennai
- குரு ஸ்ரீ ஷாந்திவிஜய் ஜெயின் மகளிர்க் கல்லூரி – Guru Shree Shantivijai Jain College for Women, Chennai
- பேராசிரியர் தனபாலன் மகளிர்க் கல்லூரி – Prof. Dhanapalan College for Women, Chennai
- ஆர்.பி. கோதி ஜெயின் மகளிர்க் கல்லூரி – R.B. Gothi Jain College for Women, Chennai
- ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷாஷுன் ஜெயின் மகளிர்க் கல்லூரி – Shri Shankarlal Sundarbai Shasun Jain College for Women, Chennai
- சோகா இகேடா மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – Soka Ikeda Arts and Science College for Women, Chennai
- ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – Sri Kanyaka Parameswari Arts and Science College for Women, Chennai