குருவிரொட்டி இணைய இதழ்

பப்பாளிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் பகுதி – மகளிர்க்காக

பப்பாளிக்காய் கூட்டு – சமையல் பகுதி – Papaya-curry – Semi Gravy

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. முதலில் பப்பாளிக்காயை தோல் சீவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடலைப்பருப்பை வேக விடவும். பருப்பு அரை பதமாக வந்தவுடன், அரிந்து வைத்த பப்பாளியை பருப்புடன் சேர்த்து வேகவிடவும். பூண்டுப் பற்களை உரித்து அதில் போடவும். பின் சிறிதளவு உப்பு சேர்த்து, காய் வெந்தவுடன் பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
  3. காய்ந்த மிளகாய்,தேங்காய்த்துண்டுகள், சீரகம் ஆகியவற்றை மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு அரைத்து, விழுதைத் தனியாக எடுத்துக் கொள்ளவும். குறிப்பு: அடுப்பில் வைத்த காய் வெந்து கொண்டிருக்கும் அதே வேளையில், இந்த விழுதை அரைத்தால், சமையல் நேரம் மிச்சமாகும்.
  4. அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி, அடுப்பை மெதுவாக எரிய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன் தக்காளியை அரிந்து அதில் போட்டு நன்றாக வதக்கவும். பின், வேகவைத்த பப்பாளிக்காய் மற்றும் பருப்பை வதக்கிய தக்காளியுடன் சேர்த்து நன்றாக கிளறவும். குறிப்பு: தண்ணீர் வற்றினால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  5. ஐந்து நிமிடம் கழித்து, உப்பு, மஞ்சள் தூள், மற்றும், அரைத்த தேங்காய்-மிளகாய் கலந்த விழுதையும் அதில் போட்டு கிளறவும்.
  6. பின், இறக்கிவைக்கும்போது, மிளகுத்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பாத்திரத்தை அடிப்பில் இருந்து இறக்கி வைக்கவும். உப்பு சரியான அளவு உள்ளதா எனப் பார்த்துக் கொள்ளவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான, பப்பாளிக்காய் கூட்டு தயார்.