பரங்கிக்காய் கூட்டு – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- பரங்கிக்காய் = அரை கிலோ (500 கிராம்) அல்லது 5 கீற்றுகள்
- தேங்காய் = அரை மூடி
- சீரகம் = 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் = 5
- மிளகு = 6
- பூண்டு = 4 பற்கள்
- கறிவேப்பிலை = சிறிது
- எண்ணெய் = 25 மி.லி.
- கடுகு = 1 தேக்கரண்டி
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- பரங்கிக்காயை சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- மிளகாய், தேங்காய், சீரகம், பூண்டு, மிளகு, கறிவேப்பிலை இவற்றை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவேண்டும்.
- தேங்காயை மென்மையாக அரைக்காமல் கொஞ்சம் லேசாக அரைத்து எடுக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும்.
- அதனுடன் காயைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது (கால் டம்ளர்) தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- காய் வெந்தவுடன் அரைத்த தேங்காயைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கி வைக்கவும்.
இப்போது பரங்கிக்காய் கூட்டு தயார்.
Be the first to comment