சிறுகீரைக் கூட்டு – செய்முறை – சமையல்
தேவையான பொருட்கள்
- சிறுகீரை = 1 கட்டு
- பச்சை மிளகாய் = 3
- சீரகம் = 1/2 தேக்கரண்டி
- பூண்டு = 4 பற்கள்
- பச்சைப் பருப்பு = 50 கிராம்
- வெங்காயம் = 1
- தக்காளி = 2
- தேங்காய்த் துண்டு = 4
- பெருங்காயத்தூள் = சிறிதளவு
- தாளிக்க எண்ணெய் = 50 மி.லி.
- கடுகு = 1 மேசைக்கரண்டி
- உப்பு = தேவைக்கேற்ப.
செய்முறை
- முதலில் கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- கீரையைக் கிள்ளி அதை அரிந்து எடுத்துக்கொள்ளவும்.
- தேங்காயுடன் சீரகத்தைச் சேர்த்து மென்மையாக அரைத்து எடுக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் பருப்பைப் போட்டு வேகவைக்கவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
- பருப்பு வேகும் போது பூண்டை உரித்து அதில் போடவும்.
- ஐந்து நிமிடங்கள் கழித்து, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அதில் அரிந்து போடவும்.
- பருப்பு அரை பதமாக வேகும் பொழுது அரிந்து வைத்துள்ள கீரையையும் உப்பையும் போட்டு கிளறி விடவும்.
- கீரை வெந்தவுடன், அரைத்த தேங்காயையும், பெருங்காயத் தூளையும் போட்டு கிளறவும்.
- எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
இப்போது சுவையான சிறுகீரைக் கூட்டு தயார்.