சின்ன வெங்காயப் பொரியல் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Small Onion Fry – Recipe
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) = 300 கிராம்
- உலர்ந்த காய்ந்தமிளகாய் = 3
- தேங்காய் துண்டு = 3
- உளுத்தம்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி
- சீரகம் = 1/2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் = ஒரு சிட்டிகை
- எண்ணெய் = 50 மி.லி
- கடுகு = 1/2 மேசைக்கரண்டி
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக அரிந்து கொள்ளவும்.
- தேங்காய், மிளகாய், சீரகம் இவற்றை சிறிய மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு லேசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- அடுப்பை பற்றவைத்து மெதுவாக எரியவிடவும். பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்; எண்ணெய் காய்ந்தவுடன் கடுகை போடவும்;
- கடுகு வெடிக்கும் போது அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு கிளறவும். உளுந்து சிவந்து வரும்போது அதில் வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் இவற்றைப் போட்டு நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.
இப்போது சின்ன வெங்காயம் பொரியல் தயார்.
Be the first to comment