பூண்டு குழம்பு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Garlic Gravy- Recipe
தேவையான பொருட்கள்
- பூண்டு = 150 கிராம்
- வெங்காயம் = ஒன்று
- குழம்பு மிளகாய்த் தூள் = 50 கிராம்
- வெந்தயத் தூள் = ஒரு மேசைக்கரண்டி
- சீரகத்தூள் = 1 மேசைக்கரண்டி
- பெருங்காயத் தூள் = 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் = 1 சிட்டிகை
- சமையல் எண்ணெய் = 50 மிலி
- புளி = 25 கிராம்
- தனியாத்துள் = 1 மேசைக்கரண்டி
- கடுகு = தாளிக்க கொஞ்சம்
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- பூண்டை முழு பற்களாக உரித்து எடுத்து வைத்துகொள்ளவும்.
- பின் வெங்காயத்தை அரிந்து எடுத்துக்கொள்ளவும் .
- புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
- முதலில் அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தை அதன் மீது வைத்து எண்ணெய் ஊற்றவும்; பிறகு, அடுப்பை மெதுவாக எரியவிடவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும்.
- கடுகு வெடித்தவுடன் வெங்காயத்தை அதில் போட்டு கிளறவும்.
- வெங்காயம் சிவந்து வரும்போது உரித்து வைத்த பூண்டை அதில் போட்டு நன்றாக கிளறவும். பின் மிளகாய்த் தூள், தனியாத்தூள் இவற்றையும் அதில் போட்டு நன்றாக கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி , பச்சை வாசனை வராமல் நன்றாக வதக்கவும். கரைத்த புளியை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
- பின் சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள், மற்றும் வெந்தயத் தூள் போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்றாக கெட்டியாக வந்தவுடன் இறக்கிவிடவும்.
இப்போது கெட்டியான, சூடான மற்றும் சுவையான பூண்டு குழம்பு தயார்.