மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி
தேவையான பொருட்கள்
- மூக்குக் கடலை = 100 கிராம்
- தக்காளி = 2
- வெங்காயம் = 1
- தனியாத் தூள் = 1 மேசைக்கரண்டி
- சோம்பு = 1 மேசைக்கரண்டி
- கறி, மசாலா பட்டை = சிறிது
- பிரிஞ்சி இலை = 1
- சமையல் எண்ணெய் = 25 மி.லி.
- குழம்பு மிளகாய்த்தூள் = 4 மேசைக்கரண்டி
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் மூக்கு கடலையை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஊறவைத்த மூக்குக் கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் வேகவத்த கடலையில் இருந்து கொஞ்சம் தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு மென்மையாக இல்லாமல் சற்று அரைப்பதமாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு கிளறிவிடவும்.
- தக்காளி, வெங்காயம் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கியவுடன் தனியாத் தூள், மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு கிளறி விட்டு, வேக வைத்த கடலையைப் போட்டு கிளறி விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றவும்.
- தேவைக்கு ஏற்ப உப்பையும் போட்டு குழம்பை கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து வரும்போது அரைத்த மூக்கு கடலையைப் போட்டு கொதிக்கவிட்டு, உப்பு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.
இப்போது சுவையான மூக்குக்கடலைக் கறி தயார். இது சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண உகந்ததாக இருக்கும்.