மோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- வெள்ளரிக்காய் பெரிசு = 1 (அல்லது) கல்யாண பூசணிக்காய் = ஒரு பாதி
- புளித்த தயிர் = அரை லிட்டர்
- தேங்காய் = ஒரு மூடி
- இஞ்சி = ஒரு சிறு துண்டு
- பச்சை மிளகாய் = 4
- கடலைப்பருப்பு = ஒரு மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை = சிறிது
- எண்ணெய் = சிறிதளவு
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- கடுகு = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் வெள்ளரிக்காய் அல்லது பூசணிக்காய் இவற்றில் ஏதாவது ஒரு காயைத் தோல் சீவி, சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அடுப்பைப் பற்ற வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி, காயை வேக வைக்கவும்.
- கடலைப்பருப்பை இரண்டு நிமிடம் ஊற வைக்கவும்.
- தேங்காயைத் துருவி அல்லது துண்டுகளாக மிக்ஸியில் போட்டு, அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை இவற்றை எல்லாம் ஒன்றாகப் போட்டு அரைத்து எடுக்கவும்.
- தயிரை சிறிது தண்ணீர்விட்டு மத்தால் கடைந்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், வேகவைத்த காயை அதில் போட்டு, சிறிது உப்பைப் போட்டு கிளறவும். அரைத்த தேங்காய் விழுதையும் அதில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கலக்கிக் கொதிக்கவிடவும். பின் இறக்கி வைக்கும் முன் கடைந்த தயிரையும் அதில் போட்டு, தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள் போட்டு இறக்கிவைக்கவும்.
இது சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்.