பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி
தேவையான பொருட்கள்
- பூண்டு = 100 கிராம்
- வெந்தயத் தூள் = 2 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய்= 2
- தேங்காய் துண்டு = 4
- சீரகம் = அரை மேசைக்கரண்டி
- குழம்பு மிளகாய் தூள் = 25 கிராம்
- தனியா தூள் = 2 மேசைக்கரண்டி
- பெருங்காயத்தூள் = சிறிது
- சமையல் எண்ணெய் = 25 மி.லி.
- புளி = சிறிது
- கடுகு = சிறிது (தாளிக்க)
- தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
- முதலில் பூண்டைத் தோலுரித்து வைக்கவும்.
- தேங்காய்த் துண்டை சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்துவைத்த தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை லேசாக கீறி அதையும் சேர்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
- தக்காளி, வெங்காயம் இவற்றை அரிந்து வைக்கவும்.
- வறுத்து வைத்த தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.
- புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் அரிந்து வைத்த வெங்காயத்தையும், பூண்டையும் அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
- அதனுடன் தக்காளியையும் போட்டுக் கிளறவும். அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
- பின் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் இவற்றைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும். குழம்பு அதிக தண்ணீர் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் நல்லது.
- ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றவும். உப்பு போட்டு நன்றாக கரண்டியால் கலக்கிவிடவும்.
- குழம்பு கொதிக்கும் போது, அரைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு கொதிக்கவிடவும்.
- பெருங்காயத் தூளைப் போட்டு இறக்கி வைக்கவும்.
இப்போது மணம் மற்றும் சுவை மிகுந்த பூண்டு-வெந்தயக் குழம்பு தயார்.
Be the first to comment