குருவிரொட்டி இணைய இதழ்

தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி


தக்காளிக்காய் சாம்பார் – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Green Tomato Sambar – Recipe

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. தக்காளிக்காயை அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை அதில் வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் காய்ந்தவுடன், கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. அரிந்த தக்காளிக்காய் துண்டுகளை அதில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மற்றும் தனியாத்தூள் ஆகியவற்றைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு அதை அடுப்பிலிருந்து இறக்கி தனியாக வைக்கவும்.
  6. மற்றொரு பாத்திரத்தில் பருப்பைப்போட்டு வேகவிடவும். பருப்பு பாதி வெந்தவுடன், பூண்டை உரித்து அதில் போடவும்.
  7. சிறிது நேரம் கழித்து, வதக்கிய தக்காளியை பருப்பில் போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்றாக கொதிக்கவிடவும்.
  8. சாம்பார் கொதித்தவுடன், பெருங்காயத்தூளை அதில் போட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து, கொத்தமல்லித் தழையை அதில் போட்டு மூடி வைக்கவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான தக்காளிக்காய் சாம்பார் தயார்.