குருவிரொட்டி இணைய இதழ்

உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி


உருளைக்கிழங்கு பால் கறி – சமையல் பகுதி – மகளிர்ப்பகுதி – Potato-Coconut Milk Curry (Gravy)

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. பட்டாணியை 3 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
  2. ஊறிய பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காயைத் துருவி, 3 முறை பிழிந்து பாலை எடுக்கவும். குறிப்பாக, முதலில் பிழிந்த கெட்டியான பாலை தனியாக ஒரு கிண்ணத்திலும், அடுத்தடுத்து பிழிந்த பாலை மற்றொரு கிண்ணத்திலும் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. கசகசா, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றை, மினரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு, நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பைப்பற்ற வைத்து, ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மெதுவாக எரிய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன், பட்டை, சோம்பு இவற்றை போடவும். பின் புதினா இலையைப் போட்டு கிளறவும்.
  7. புதினா வதங்கியவுடன், வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கசகசா விழுதை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  8. முதன்முதலில் பிழிந்து எடுத்த தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி கொதிக்கவிடவும்.
  9. நல்ல வாசனை வந்தவுடன், வேகவைத்த பச்சைப்பட்டாணி, மீதமுள்ள தேங்காய்ப்பால் (அடுத்தடுத்து பிழிந்த, மற்றொரு கிண்ணத்தில் எடுத்து வைத்த தேங்காய்ப்பால்), மற்றும் தேவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து, நன்றாக கிளறி பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இப்போது சூடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு பால் கறி தயார். இது பூரி மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து உண்ண நன்றாக இருக்கும்.