குருவிரொட்டி இணைய இதழ்

வெங்காயக் குழம்பு – செய்முறை சமையல் – மகளிர்ப் பகுதி

வெங்காயக் குழம்பு – செய்முறை – சமையல் – மகளிர்ப் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. வெங்காயத்தை நீளமாக அரிந்து வைத்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பைப் பற்ற வைத்து அதில் அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகை போடவும்.
  3. கடுகு வெடித்தவுடன் அரிந்து வைத்த வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. வெங்காயம் சிவந்து வரும் போது அதில் மிளகாய்த் தூள், தனியாத் தூள் இவற்றை அதில் போட்டுக் கிளறி விடவும். கருகாமல் இருக்க சிறிது தண்ணீர் விட்டு கிளற வேண்டும்.
  5. பின் வெந்தயத் தூள், சீரகத் தூள் இவற்றைப் போடவும்.
  6. பின் கரைத்த புளியை அதில் ஊற்றி உப்பையும் போட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும்.

இப்போது சுவையான வெங்காயக் குழம்பு தயார்.