ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2
- பச்சைமிளகாய் = 3
- தேங்காய்த் துண்டு = 4
- சீரகம் = 1/2 மேசைக்கரண்டி
- எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க)
- கடுகு = சிறிதளவு
- கருவேப்பிலை = சிறிதளவு
- உப்பு = தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் மாங்காயை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
- பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு மாங்காயை வேகவிடவும்.
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை ஒன்றாகப் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த தேங்காயை வெந்து கொண்டிருக்கும் மாங்காயில் போட்டு கிளறவும்.
- அதை இறக்கி வைத்துவிட்டு, அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு அதில் மாங்காயைப் போட்டு கிளறி மூடி வைக்கவும்.
மாங்காய் பச்சடி சாம்பார் சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
Be the first to comment