வெண்டைக்காய் பச்சடி – Okra Pachadi (Ladies Finger Pachadi) – சமையல் பகுதி
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் = 150 கிராம்
- தேங்காய் = 3 துண்டுகள்
- சீரகம் = 1/4 மேசைக்கரண்டி
- புளித்த தயிர் = 100 மி.லி.
- பூண்டு = 1 பல்
- எண்ணெய் = 25 மி.லி.
- கடுகு = சிறிதளவு
- தேவைக்கேற்ப உப்பு
- தண்ணீர் (100 மி.லி தண்ணீர், அதாவது, ஒரு சிறிய குவளையில் பாதி அளவு தண்ணீர்)
செய்முறை
- முதலில் வெண்டைக்காயை கழுவி மெலிதாக, வட்டமான சீவல் துண்டுகளாக (Slices) அரிந்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய்த்துண்டுகளையும், சீரகத்தையும் சேர்த்து மின் அரைவை எந்திரத்தில் (மிக்சியில்) போட்டு நன்றாக அரைத்து எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் தனியாக வைக்கவும்.
- அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தை அதில் வைத்து எண்ணெயை ஊற்றி, அடுப்பை மெதுவாக எரியாக எரிய விடவும்.
- எண்ணெய் காய்ந்தவுடன், கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன், வெண்டைக்காய்த் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும். குறிப்பு: வெண்டைக்காயை லேசாக கருகியது போன்ற பதத்தில் வதக்கிக் கொள்ளவும்.
- கிண்ணத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் சீரக விழுதை, வதக்கிய வெண்டைக்காயுடன் சேர்த்து, நன்றாக கிளறிவிடவும். பின், சிறிதளவு நீரை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதித்தபின், பாத்திரத்தை இறக்கி வைத்து, தயிரை அதில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
இப்போது சுவையான, வெண்டைக்காய் பச்சடி தயார்.
Be the first to comment