குருவிரொட்டி இணைய இதழ்

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – மகளிர் பகுதி

சர்க்கரைப் பொங்கல் – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி இறக்கவும். பாகு வெல்லம் நன்றாக கரைந்தால் போதும்.
  2. பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 5 குவளை (டம்ளர்). தண்ணீர் ஊற்றவும்.  தண்ணீர் கொதிக்கும்போது அரிசியைக் கழுவி அதில் போடவும்.
  3. பச்சை பருப்பை இளம் வறுவலாக வறுத்து அதையும் கழுவி அரிசியுடன் சேர்த்து போட்டு நன்றாக கிளறி விடவும்.
  4. அரிசி வெந்தவுடன் பாகு காய்ச்சிய வெல்லத்தையும் அதனுடன் சேர்த்து கிளறவும்.
  5. தண்ணீர் வற்றியவுடன் இறக்கி வைத்து பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரியவிடவும்.
  6. பின் முந்திரி மற்றும் திராட்சை இவற்றைப் போட்டு வறுத்து இறக்கி வைத்த பொங்கலில் போட்டு நன்றாக கிளறி மூடவும் .
  7. பின் ஏலக்காயைப் பொடி செய்து போடவும்.

வெல்லத்தை பாகு காய்ச்சாமல் அப்படியே போட்டும் பொங்கல் செய்யலாம். ஆனால், அதை பாகு காய்ச்சி சேர்ப்பதால், பொங்கல் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.

பச்சை பருப்பை வறுத்து சேர்ப்பதால், பொங்கல் கூடுதல் மணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.

குறிப்பு:

தேவைப்படின், பால் சேர்த்தும் பொங்கல் செய்யலாம். அப்படி விருப்பமிருப்பின், அரிசி வேகும் முன் 100 மி.லி. பால் சேர்த்து பால் பொங்கல் செய்யலாம்.